FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 2, 2016

தொழில்தொடங்குவதற்கு தாட்கோ மூலம் கடன்பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ஞானசேகரன் தகவல்

 01.01.2016, திருவண்ணாமலை,
திருவண்ணாமலை மாவட்டத்தில் தாட்கோ மூலம் தொழில் தொடங்க கடன் கேட்டு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தாட்கோ திட்டங்கள்

ஆதிதிராவிடர்களுக்கு தாட்கோ மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் செயல்படுத்தப்படுகின்றன. அதன்படி மகளிருக்கு நிலம் வாங்கும் திட்டம், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நிலம் மேம்படுத்துதல் திட்டம், தொழில் முனைவோர் திட்டங்கள், பெட்ரோல், டீசல், எரிவாயு சில்லறை விற்பனை நிலையம் அமைத்தல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டங்களில் பயன் அடைவோர் 18 முதல் 55 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விற்பனை நிலையம் அமைப்பவர்களுக்கு மட்டும் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

வயது வரம்பு

இளைஞர்களுக்கான சுய வேலைவாய்ப்பு திட்டம், மருத்துவமனை, மருந்துக்கடை, கண் கண்ணாடியகம், முடநீக்க மையம், ரத்தப்பரிசோதனை நிலையம் அமைக்க 18 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். மருத்துவமனை அமைப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம்,

ஆண்கள் பெண்கள், திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், மகளிர் கலப்பு (ஆண், பெண்) குழுவினருக்கான சுழல் நிதி மற்றும் பொருளாதார கடனுதவி பெற 18 முதல் 60 வயது வரை இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்குள் இருக்க வேண்டும்.

முன்னுரிமை

மாவட்ட கலெக்டரின் விருப்புரிமை நிதி பெற விருப்பமுள்ள ஆதரவற்ற விதவைகள், மாற்றுத்திறனாளிகள், 40 வயதுக்கு மேற்பட்ட திருமணம் ஆகாத பெண்கள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதிக்கு விதவைகள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர் அல்லது பாதுகாவலர் இல்லாத குழந்தைகள், எச்.ஜ.வி.யால் பாதித்தவர்கள் மற்றும் குழந்தைகள், திருநங்கைகள், நலிந்த கலைஞர்கள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

இந்திய குடிமைப் பணி முதன்மை தேர்வு எழுதுவோர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தொகுதி–1 முதல் நிலை தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நிதி உதவி பெற 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சம் வரை இருக்கலாம். சட்டப் பட்டதாரிகள் நிதியுதவி பெற 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். பட்டயக் கணக்கர், செலவு கணக்கர்களுக்கான நிதி உதவி பெற 25 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்துக்கு உச்சவரம்பு இல்லை.

ஆன்லைனில்

எனவே இந்த திட்டங்களில் பயன்பெற விருப்பம் உள்ளவர்கள் http://application.tahd.com என்ற இணையதள முகவரிக்கு சென்று ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய வேண்டும். பதிவின்போது குடும்ப அட்டை, இருப்பிடச் சான்று, சாதிச் சான்று, வருமானச் சான்று, கல்வித்தகுதி, பள்ளி மாற்றுச் சான்றிதழ், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, ஆதார் அட்டை இவற்றில் ஏதாவது ஒன்றையும், திட்ட அறிக்கை பெறப்பட்ட தேதி உள்ளிட்டவற்றையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். மகளிர் வேளாண் நிலம் வாங்கும் திட்டத்தில் மூல பத்திரம், விற்பனை உடன்படிக்கை, பத்திரம், வில்லங்க சான்று, சர்வே எண், சிட்டா அடங்கல், நில பத்திரம் மற்றும் நிலம் விற்பவரது சாதிச் சான்று விவரங்கள் அடங்கிய ஆவணங்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேற்கண்டவாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment