FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 7, 2016

சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா


ரியாத்: ரியாத் தமிழ்ச் சங்க வெள்ள நிவாரண உதவி நிறைவு விழா சென்னையில் கடந்த 3ம் தேதி நடைபெற்றது. ரியாத்வாழ் தமிழர்கள் வழங்கிய 32 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வெள்ள நிவாரண உதவிகளை அளித்துள்ளனர். ரியாத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு சென்ற திரு. ஜமால் சேட் அவர்களின் தலைமையில் 25 தன்னார்வலர்கள் கடந்த ஒரு மாதகாலமாக சென்னை மற்றும் கடலூரில் களப்பணியாற்றினர். இந்நிலையில் களப்பணியின் நிறைவாக சென்னை அடையாறு கால்வாய் சாலை செயின்ட் லூயிஸ் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் வளாகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விழித்திறன் மற்றும் செவித்திறன் இழந்த மாணவர்களுக்கு உதவியதோடு தன்னார்வலர்களை பாராட்டுமுகமாக 03-01-2016 அன்று ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. 

அதில் சிறப்பு விருந்தினர்களாக கீழ்க்கண்டோர் கலந்து கொண்டு தன்னார்வலர்களை பாராட்டி ரியாத் தமிழ்ச் சங்கம் சார்பாக கேடயம் கொடுத்து கவுரவித்து சொற்பொழிவாற்றினார்கள். திரு. மணி (சென்னை காவல்துறை கண்காணிப்பாளர், மனித உரிமை மற்றும் சமுதாய சேவைப்பிரிவு) திரு. ஜெயம்சுப்ரமண்யம் (சென்னை காவல் உதவி ஆணையர், புளியந்தோப்பு) திரு. பிரபு (108 சேவை மைய இயக்குனர்) திரு. ஜான்லியோ (சென்னை காவல்துறை ஆணையர், எஸ்பிசிஐடி) திரு. அமீர் (திரைப்பட இயக்குனர், சமூக ஆர்வலர்) கவிஞர். சிநேகன் (திரைப்பட பாடலாசிரியர், சமூக ஆர்வலர்) திரு. சுப்பு பஞ்சுஅருணாச்சலம் (திரைப்பட நடிகர், சமூக ஆர்வலர்) திரு. ஆளூர் ஷாநவாஸ் (விடுதலை சிறுத்தை கட்சி, சமூக ஆர்வலர்) கவிஞர். இனியவன் (பட்டிமன்ற பேச்சாளர், சமூக ஆர்வலர்) திரு. தேவசபாபதி (கனடா தமிழ்ச் சங்கம்) திரு. ரொனால்ட் (கனடா தமிழ்ச் சங்கம்) பொறியாளர். முக்ரீன் ஜமால் (திரு. ஜமால் சேட் அவர்களின் சகோதரர் மற்றும் சமூக ஆர்வலர்) நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திரு. ஜமால் சேட் (ரியாத் தமிழ்ச் சங்கம்) வரவேற்புரை : திரு. முஹம்மது ஷரீஃப் (ரியாத் தமிழ்ச் சங்கம்)


No comments:

Post a Comment