மாதம் தோறும் குறிப்பிட்ட தேதியில் கோட்டாட்சியர் தலைமையில் தனியாக சிறப்பு குறை தீர்க்கும் கூட்டம் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த இடத்திற்கே வந்து மாற்றுத்திறனாளிகளிடம் சார் ஆட்சியர் ராஜசேகர் மனுக்களை பெற்றார். அப்போது அவரிடம் மாற்றுத்திறனாளிகள், ஏற்கனவே நாங்கள் பலமுறை கொடுத்த மனுக்களை வாங்கிச் சென்ற அதிகாரிகள் இதுவரை விசாரணையே செய்யவில்லை. 100 பேருக்கு மேல் மனு கொடுத்தும் 10 பேருக்கு கூட உதவித்தொகை கொடுக்கவில்லை. எங்களிடம் மனு வாங்கும் போதே உங்களுக்கு கிடைக்காது என்று சொல்லிவிட்டால் நாங்கள் அலைய வேண்டியதில்லை. 10 முறை அலைய வேண்டியதிருக்கு. இந்த மாதிரி நிலைமையில் அலைய முடியுமா என்று குமுறினர்.
பேராவூரணி ஒன்றிய செயலாளர் லாரன்ஸ்சேவியர் கூறுகையில், மாற்றுத்திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை கிடைக்க வேண்டும். எங்களுக்கு உதவித்தொகை தந்து வாழ்வாதாரத்தை உயர்த்துங்கள். இல்லையென்றால் எங்களை கருணைக் கொலை செய்து விடுங்கள் என்றார்.
No comments:
Post a Comment