FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 7, 2016

வாய் பேச முடியாத மாற்றுதிறனாளி பெண்ணுக்கு பாலியல் தொல்லை: போலிசார் விசாரணை

07.01.2016, வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி பெண்ணை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக 3 குழந்தைகளின் தந்தையிடம் போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த தந்தை இல்லாத 19 வயது இளம் பெண் ராசி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பிறவியிலேயே வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி. அவருக்கு ஒரு சகோதரியும் உள்ளார். கூலி வேலை செய்து தாய் பிழைக்கிறார்கள். அருகில் உள்ள தோட்டங்களில் தோட்ட வேலை செய்வது ராசியின் வழக்கம். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு ராசியை காணவில்லை என்று தாய் மற்றும் உறவினர்கள் எங்கு தேடியும் காணவில்லை.

அடுத்த நாள் காலை பனங்குளம் பேருந்து நிறுத்தம் அருகே ராசி மட்டும் தனியாக நின்று கொண்டிருப்பதை பார்த்த அப்பகுதி மக்கள் அந்த பெண்ணிடம் விசாரித்த போது அவருக்கு வாய் பேச முடியவில்லை. அந்த பெண் சைகையால் பதில் சொல்லியுள்ளார். தனது தந்தை மற்றும் குடும்பத்தினர் பற்றிய விபரங்களை சொன்னவர் மேலும் தன்னை தனது பக்கத்து வீட்டில் உள்ள ஒருவர் இரவில் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

அதன் பிறகு தனது வீட்டிற்குச் சென்ற ராசி தன் தாய் மற்றும் உறவினர்களிடம் இது பற்றி கண்ணீருடன் கூறியுள்ளார். அடையாளம் சொன்ன 3 குழந்தைகளின் தந்தையிடம் விசாரித்த போது அந்த நபர் நான் அழைத்துச் செல்லவில்லை என்று மறுத்துவிட்டதால் ராசியின் தாய் கீரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இளம் பெண் மற்றும் பாலியல் தொல்லை என்பதால் கீரமங்கலம் போலிசார் ஆலங்குடி மகளிர் போலிசாரை வரவழைத்து விசாரணை செய்து வருகின்றனர். விசாரணையில் ராசி சொல்வது உண்மை எனில் 3 குழந்தைகளின் தந்தை கைது செய்யப்படலாம் என்று போலிசார் கூறுகின்றனர். மேலும் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதணைகள் நடத்தப்பட உள்ளது என்றும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment