FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, January 13, 2016

காது கேட்காத குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தாய் தற்கொலை


11.01.2016
தனது குழந்தைகளுக்கு காது கேட்காததை அடுத்து, குழந்தைகளுடன் தானும் கிணற்றில் குதித்து தாய் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம், உடுமலைபேட்டையில் உள்ள இந்திரா நகரை சேர்ந்த விவசாயி செல்வராஜ் (38). இவரது மனைவி கலைச்செல்வி (32). இவர்களுக்கு கவிப்பிரபா (13), நவீனா (7) என்று இரு பெண் குழந்தைகளும், பத்து மாதத்தில் குகன் என்ற ஆண் குழந்தை ஒன்றும் உள்ளது.

நவீனாவுக்கு காது கேட்கும் திறன் குறைபாடு இருந்தது. கோவை தனியார் மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்தனர். அதேபோல, பத்து மாத குழந்தை குகனுக்கும், காது கேட்கும் திறன் குறைபாடு இருப்பது, சில நாட்களுக்கு முன் தெரியவந்தது.

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு குறித்து, கலைச்செல்வி தொடர்ந்து கவலையுற்று வந்துள்ளார். இதனால், மேலும் விரக்தியடைந்த கலைச்செல்வி, நேற்று காது குறைபாடுள்ள இரு குழந்தையும் தன்னுடைய உடலுடன் சேர்த்துக் கட்டிக்கொண்டு, கயிற்றின் இன்னொரு முனையில் பெரிய கல்லையும் கட்டிக்கொண்டு கிணற்றில் குதித்துள்ளார்.

இந்நிலையில், அதிகாலையில் தூங்கி எழுந்த மூத்த மகள் கவிப்பிரபா, தனது தாய், தங்கை, தம்பியை காணாததைக்கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் அருகில் தூங்கிக்கொண்டிருந்த தந்தையை எழுப்பியுள்ளார்.

கதவை திறந்து பார்த்தபொழுது வீட்டின் வெளிப்பக்கக் கதவு பூட்டியிருந்ததால், அருகில் உள்ள ஒருவருக்கு தொலைபேசியில் அழைத்து திறக்கச் சொல்லியுள்ளார். பின்னர், கலைச்செல்வியையும் குழந்தைகளையும் தேடிப்பார்த்துள்ளனர்.

எங்கும் காணாததால், மீண்டும் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கலைச்செல்வி எழுதி வைத்திருந்த கடிதம் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த செல்வராஜ, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

அதன் பேரில், உடுமலை காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் கிணற்றிலிருந்து, சடலங்களை மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

No comments:

Post a Comment