FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, January 7, 2016

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

05.01.2016, சங்கரன்கோவில்,

சங்கரன்கோவில் தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வந்த உதவி தொகையை நிறுத்தப்பட்ட காலத்திற்கும் சேர்த்து வழங்க வேண்டும், அரசு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிதொகை வழங்க வேண்டும், மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை போல வருவாய் துறையிலும் மாதம் ரூ.1500 உதவித்தொகை வழங்க வேண்டும், இலவச வீட்டு மனை பட்டா வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு பேராட்டத்தை நடத்தினர்.

தமிழ்நாடு அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை நல சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் பாலகணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் தியாகராஜன், மாவட்ட செயலாளர் குமாரசாமி, மாவட்ட உதவி தலைவர் இசக்கி, சி.பி.எம் வட்டார செயலாளர் அசோக்ராஜ், வட்டார தலைவர்கள் பசும்பொன், செல்வமுருகன், மாரியப்பன் உள்ளிட்டோர் பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment