FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Saturday, January 9, 2016

வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

திண்டுக்கல், 09 January 2016
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருவதாக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஜெகதீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் மேலும் தெரிவித்துள்ளது: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கல்வித் தகுதியை பதிவு செய்துவிட்டு, 5ஆண்டுகளுக்கும் மேலாக வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைஞர்களுக்கு, தமிழக அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. இதற்கான விண்ணப்பங்கள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வழங்கப்படுகின்றன. பத்தாம் வகுப்பில் தவறியவர்கள் மற்றும் தேர்ச்சி பெற்றவர்கள், பிளஸ் 2 முடித்தவர்கள் மற்றும் பட்டம் பெற்றவர்கள் இந்த உதவித் தொகையினை பெறலாம். மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து கடந்த டிசம்பர் மாதம் 5 ஆண்டுகள் நிறைவு செய்தவர்கள் உதவித்தொகை பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் ஓராண்டு நிறைவு செய்திருந்தால் போதுமானது. உதவித்தொகை பெறுவதற்கு எஸ்.சி., எஸ்.டி. வகுப்பினர் 45 வயதுக்குள்ளும், இதர வகுப்பினர் 40 வயதுக்குள்ளும் இருக்கவேண்டும். பயனாளியின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும், தமிழகத்தில் கல்வி பயின்றவராகவும், வேறு எந்தப் பணியிலும் இல்லாதவராகவும் இருக்க வேண்டும். பள்ளி அல்லது கல்லூரியில் படிப்பை தொடர்பவர்கள் உதவித்தொகை பெற இயலாது.

தகுதியுடைய பயனாளிகள், வேலைவாய்ப்பு அலுவலக அடையாள அட்டை, கல்வித் தகுதி சான்றிதழ்களுடன், திண்டுக்கல் அலுவலகத்துக்கு வரவேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை பிப்ரவரி 29ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.

வழங்கப்படும் தொகை விவரம்:

பிரதி மாதம், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதோருக்கு ரூ.100, தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ. 200, பட்டம் அல்லது முதுகலைப் பட்டம் முடித்தவர்களுக்கு ரூ. 300, மாற்றுத் திறனாளிகளாக இருந்தால் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.600, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.750, பட்டம் முடித்தவர்களுக்கு ரூ.1000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

3 ஆண்டுகள் உதவித்தொகை பெற்றவர்களுக்கு, மீண்டும் உதவித்தொகை வழங்க இயலாது எனத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment