நாகப்பட்டினம், 14 January 2016
வேலைவாய்ப்பற்ற மாற்றுத் திறனாளி இளைஞர்கள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் சு. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தில், எஸ்.எஸ்.எல்.சி வரை படித்தவர்களுக்கு மாதம் ரூ. 600-ம், பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதம் ரூ. 750-ம், பட்டதாரி, முதுநிலை பட்டதாரிகளுக்கு ரூ. 1,000-மும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
கல்வித் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து குறைந்தபட்சம் ஓராண்டுக்கும் மேற்பட்டவர்கள் இந்த உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கான அதிகபட்ச வயது வரம்பு- 45. இதர வகுப்பினருக்கான வயது வரம்பு- 40.
தகுதியானவர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன், உரிய சான்றிதழ்கள், வங்கி கணக்குப் புத்தகம் ஆகியவற்றை இணைத்து வருகிற 29-ஆம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்குக் கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் தனது செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment