FLASH NEWS: ஆப்கானிஸ்தான் நடத்திய பதிலடி தாக்குதல்; பாக்., வீரர்களின் பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு ***** ‘போர்களை நிறுத்தி மக்களை காப்பாற்றியதே மகிழ்ச்சி’ - நோபல் பரிசு பற்றி டிரம்ப் கருத்து ***** ஸ்காட்லாந்தில் ரூ.17 ஆயிரம் கோடியில் காற்றாலை அமைக்கும் சீன நிறுவனம் ***** சூடானில் உள்நாட்டு கலவரம்: பொதுமக்கள் 53 பேர் உயிரிழப்பு ***** சீன பொருட்கள் மீது கூடுதலாக 100 சதவீத வரி - டிரம்ப் மீண்டும் அதிரடி ***** சிலியில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டரில் 7.8 ஆக பதிவு ***** பிலிப்பைன்ஸ் நிலநடுக்கம்: 6 பேர் பலி ***** ஆப்கனுடன் விளையாடுவதை பாகிஸ்தான் நிறுத்தி கொள்ள வேண்டும் - தலிபான் வெளியுறவுத்துறை மந்திரி எச்சரிக்கை ***** ஆப்கானிஸ்தான்: தலீபான் வெளியுறவு மந்திரி முதன்முறையாக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் ***** அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் தீபாவளியை அதிகாரப்பூர்வ விடுமுறை நாளாக அறிவித்துள்ளது ***** இனப்படுகொலை செய்யும் நாடு பாகிஸ்தான்; ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா பதிலடி ***** இந்தியாவுடனான மோதலின் போது சீன ஆயுதங்கள் சிறப்பாக செயல்பட்டன - பாகிஸ்தான் சொல்கிறது ***** அக்டோபர் 3-ம் வாரத்தில் இருந்து புதுவையில் கனமழை பெய்யக்கூடும் என்று புதுச்சேரி வானிலையாளர் பாலமுருகன் கூறியுள்ளார் ***** பீகார் தேர்தல்: தொகுதி பங்கீடு நிறைவு - பாஜக, ஜே.டி.யு. தலா 101 தொகுதிகளில் போட்டி ***** பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணங்களை யுபிஐ மூலம் வசூலிக்க மத்திய அரசு அறிவுறுத்தல் ***** 22 குழந்தைகள் பலியான விவகாரம்: இருமல் மருந்து நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டது அம்பலம் ***** முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் ஆபரேஷன் புளூ ஸ்டார் நடவடிக்கை தவறு: ப. சிதம்பரம் பரபரப்பு பேச்சு ***** அருணாச்சல பிரதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவு ***** அமைதிக்காக நாங்கள் செய்ததுபோன்று பாகிஸ்தானும் செயல்பட வேண்டும்: ஆப்கானிஸ்தான் வெளியுறவு துறை மந்திரி வலியுறுத்தல் *****

Sunday, January 3, 2016

காய்ச்சலால் பேசும் திறன் இழந்த இளம் பெண்ணுக்கு மீண்டும் பேச்சு திறன் வந்தது எப்படி?

திருவிடைமருதூர்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த கோவிந்தகுடியை சேர்ந்த ராதாகிருஷ்ணன் முத்துலெட்சுமி தம்பதி மகள் மகள் துர்கா (23). இவரது கணவர் பிரபாகரன். 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது. கடந்த அக்டோபர் 13ம் தேதி துர்காவிற்கு காய்ச்சலால் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. குடும்பத்தினர் அவரை கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு துர்காவிற்கு திடீர் என தலை மட்டும் தொடர்ந்து ஆடத் தொடங்கியது. டாக்டர்கள் நரம்பு தளர்ச்சி ஏற்பட்டுள்ளதால் தலை ஆடுவதாக கூறினர். இந்நிலையில் நன்றாக பேசிக் கொண்டிருந்த துர்காவிற்கு திடீர் என பேச்சுத்திறன் பறிபோனது.அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படாததாலும், தவறான சிகிச்சையால்தான் இந்நிலை ஏற்பட்டதாக கூறி அவரை அங்கிருந்து புதுவை ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சையில் தலை ஆடுவது நின்றது.

ஆனால் பேச்சுதிறன் மட்டும் வரவில்லை. இதையடுத்து துர்கா வீட்டுக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு பேச்சுத்திறன் வருவதற்கு கோயில், கோயிலாக குடும்பத்தினர் சென்று வந்தனர்.கடந்த 28ம் தேதி துர்கா வீட்டின் அருகே நடந்து சென்றபோது கல்லில் தடுமாறி கீழே விழுந்து தலையில் அடிபட்டது. அப்போது வலியை தாங்க முடியாமல் துர்கா அம்மா என அலறினார். அப்போது முதல் துர்காவிற்கு பேச்சுத் திறன் மீண்டும் வந்தது. இதனையடுத்து துர்கா மற்றும் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்தனர். மருத்துவர்கள் கைவிரித்த நிலையில் துர்காவிற்கு 2 மாதத்திற்கு பிறகு மீண்டும் பேச்சுத் திறன் கிடைத்ததால் குடும்பத்தினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

துர்கா கூறும்போது, ‘இரண்டரை மாதமாக வாய்பேசமுடியாத மாற்றுத்திறனாளி போல இருந்தேன். என் குழந்தை அம்மா, அம்மா என மழலை மொழியில் பேசும். அதற்கு பதில் சொல்ல முடியாமல் நான் தவித்தேன். இதற்கு ஆண்டவன் நல்ல முடிவை தந்தார். டாக்டர்கள் கைவிட்டபோதும் கடவுள் எனக்கு அருள் புரிந்தார்’என்றார்.துர்காவுக்கு திடீரென பேசும் திறன் வந்தது எப்படி என்பது குறித்து முசிறி அரசு மருத்துவமனை தலைமை மருத்துவரும், காது, மூக்கு, தொண்டை நிபுணருமான செல்வகுமாரிடம் கேட்டபோது அவர் கூறுகையில், ‘அளவுக்கு அதிகமான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் மனோ ரீதியாக பயந்து போனதால் அவருக்கு பேச்சுத்திறன் பாதிக்கப்பட்டு இருந்திருக்கலாம். அதற்கு உரிய பயிற்சி அளித்தால் மீண்டும் பேச்சு திறன் வந்து விடும். இது தவிர பேச முடியாமல் போன ஒருவர் தலையில் அடிபட்டதால் மீண்டும் தானாக பேச்சுவந்தது என்பது மருத்துவ ரீதியாக 99 சதவீதம் சாத்தியம் இல்லாதது.இது குறித்து சரியான தகவல்களை சொல்ல வேண்டுமானால் அவரது மருத்துவ சிகிச்சை பற்றிய ரிப்போர்ட் பார்த்து சொன்னால்தான் அது சரியாக இருக்கும்’ என்றார்.

No comments:

Post a Comment