15.01.2016, சென்னை,
கோவையில் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி உள்ளது. அங்கு காலியாக இருந்த கிளார்க் பணியிடத்தை வழங்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் கணேசமூர்த்தி என்ற மாற்றுத்திறனாளி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டின்படி பணியிடங்களை வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால், இந்த உத்தரவை நிறைவேற்றவில்லை என்று கூறி, பாரதியார் பல்கலைக்கழக பதிவாளர், உயர்கல்வித்துறை செயலாளர், சம்பந்தப்பட்ட கலைக்கல்லூரி ஆகியோர் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கை கணேசமூர்த்தி தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதி மணிக்குமார் விசாரித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு பணியிடம் வழங்கப்பட்டுவிட்டதாக கூறப்பட்டது. அதைத்தொடர்ந்து வழக்கை முடித்து வைத்த நீதிபதி, கல்வி நிறுவனங்கள், அரசுப் பணியிடங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு, மாற்றுத் திறனாளி பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அரசு பிறப்பிக்கும் உத்தரவின் அடிப்படையில் வாய்ப்பு வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டார்.

No comments:
Post a Comment