FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, November 3, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழா டிச. 1-இல் தொடக்கம்

புது தில்லி, 03 November 2015
மாற்றுத் திறனாளிகளுக்கான முதலாவது மூன்று நாள் சர்வதேச திரைப்பட விழா டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்குகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகராமளித்தல் அமைச்சகம் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்புடைய பல்வேறு பிரிவுகளில் 40 திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன.

டிசம்பர் 3-ஆம் தேதி சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் தேசிய திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துடன் (என்எஃப்டிசி) இணைந்து இந்த விழாவை நடத்தும் கருத்தாக்கம் மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறை மூலம் உருவாக்கப்பட்டுள்ளது.

மூன்று நாள் நடைபெறும் திரைப்பட விழாவில் வெவ்வேறு மொழிகளில் தயாரிக்கப்பட்ட 10 சலனப் படங்கள், 16 குறும்படங்கள், 14 ஆவணப்படங்கள் என மொத்தம் 40 படங்கள் திரையிடப்பட உள்ளன. இது குறித்து மத்திய மாற்றுத்திறனாளிகள் அதிகாரமளித்தல் துறையின் செயலர் லவ் வர்மா கூறியதாவது:

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து தேர்வுக்கு வரப்பெற்ற 541 படங்களில் இருந்து 40 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதற்கான தேர்வு என்எஃப்டிசி மூலம் மேற்கொள்ளப்பட்டது. சலனப்படம், குறும்படம், ஆவணப்படங்கள் என மூன்று பிரிவுகளில் படங்கள் தேர்வுக்குப் பரிசீலிக்கப்பட்டன.

டிசம்பர் 1-ஆம் தேதி தொடங்கும் திரைப்பட விழா 3-ஆம் தேதி முடிவடைகிறது. மாற்றுத்திறனாளிகள் அளித்துள்ள பங்களிப்பை கெüரவிக்கும் வகையில் இந்தத் திரைப்பட விழா அமையும்.

மேலும், மாற்றுத் திறனாளிகள் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை சுட்டிக்காட்டவும், அவர்கள் தினமும் எதிர்கொண்டு வரும் பிரச்னைகளை எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதும் குறித்து எடுத்துக்காட்டும் களமாக இந்த விழா இருக்கும். மேலும், இந்த விழாவில் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான விவாத நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட உள்ளன.

விழாவின்போது ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த இயக்குநர், திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டு ரொக்கப் பரிசு வழங்கப்படும். முதல் இரு இடங்களைப் பெறுவோருக்கு மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் சான்றிதழ் மற்றும் சுழற்கேடயம் வழங்கப்படும் என்றார் லவ் சர்மா.

No comments:

Post a Comment