FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Sunday, November 15, 2015

ரூ. 5 லட்சத்தில் காதுகேட்கும் திறன் அறியும் மையம்: ஆட்சியர்

திருநெல்வேலி, 15 November 2015
திருநெல்வேலியில் ரூ. 5 லட்சம் மதிப்பில் காதுகேட்கும் திறன் கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் மு. கருணாகரன் தெரிவித்தார்.

பாளையங்கோட்டையில் பிஷப் சார்ஜென்ட் மன வளர்ச்சிக் குன்றியோர் பள்ளியில்

கூடுதல் வகுப்பறைக் கட்டடம் கட்டுவதற்கு எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டடம் கட்டப்பட்டுள்ளது.

சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் கூடுதல் வகுப்பறைக் கட்டடத்தை திறந்துவைத்து ஆட்சியர் மு. கருணாகரன் பேசியதாவது: திருநெல்வேலி மாவட்டத்தில் இதுவரை 33,238 மாற்றுத் திறனாளிகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு மாதந்தோறும் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், தசை சிதைவு நோய் பாதிக்கப்பட்ட 118 பேருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் உதவித்தொகையும், மேலும் 8,238 பயனாளிகளுக்கு மாதம் தலா ரூ. 1,000 வீதம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, கண்ணாடி போன்றவை வழங்கப்பட்டுள்ளது. திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ. 5 லட்சத்தில் காது கேட்கும் திறன் குறித்து கண்டறியும் மையம் விரைவில் அமைக்கப்பட உள்ளது என்றார் அவர்.

இவ்விழாவுக்கு, விஜிலாசத்யானந்த் எம்.பி. முன்னிலை வகித்தார். எம்.பி.க்கள் எஸ். முத்துக்கருப்பன், கே.ஆர்.பி. பிரபாகரன், மாநகராட்சி மேயர் இ. புவனேஸ்வரி,

திருமண்டில பேராயர் ஜெ.ஜெ. கிறிஸ்துதாஸ், துணை மேயர் பூ. ஜெகநாதன், எம்.எல்.ஏ. க்கள் நயினார்நாகேந்திரன், ச. முத்துச்செல்வி, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மனோகர், மானூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் கல்லூர் இ. வேலாயுதம், அக்ரோ சேர்மன் அ. மகபூப்ஜான், வழக்குரைஞர் மு. ஹரிஹரசிவசங்கர்,

பள்ளித் தாளாளர் பி. அலெக்ஸாண்டர், மாமன்ற உறுப்பினர் பரணி ஏ. சங்கரலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில், சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பதக்கம் அணிந்து பாராட்டினார்.

இனிப்பு வழங்கல்: குழந்தைகள் தினத்தை முன்னிட்டு அங்குள்ள குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தை தொழிலாளர் நலத்துறை சார்பில் இயங்கி வரும் சிறப்பு பள்ளி குழந்தைகளுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கினார். இதில் சார்- ஆட்சியர் கே.பி. கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment