19.11.2015
ஜனாதிபதி விருது பெற்ற மாற்றுத் திறனாளி ஒருவர், 300 ரூபாய் கொடுக்கல் வாங்கல் விவகாரத்தில் டெல்லியில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வடக்கு டெல்லியில் உள்ள சீலாம்பூர் பகுதியில், வினோத் என்பவர் பெட்டிக்கடை வைத்து நடத்தி வந்தார். இவர் சிறந்த மாற்றுத் திறனாளி கல்வியாளர் என்ற ஜனாதிபதி விருதை பெற்றவர். இவரது கடைக்கு வரும் வாடிக்கையாளரான சல்மான் என்பவர், 300 ரூபாய்க்கு பொருட்கள் வாங்கி விட்டு கடன் வைத்துள்ளார். இந்த கடனை கொடுக்குமாறு வினோத் கேட்டுள்ளதாகத் தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் வினோத், தனது சகோதரருடன் சீலாம்பூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வந்த போது, அவரை வழி மறித்த சல்மான், தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறு முற்றவே திடீரென்று கைத்துப்பாக்கியை எடுத்த சல்மான், வினோத்தை நோக்கி சுட்டுள்ளார். இதில் வினோத்தின் தலையில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் சாய்ந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சகோதரர் கமல், ரத்த வெள்ளத்தில் கிடந்த வினோத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வினோத் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்து விட்டனர்.கொலை செய்யப்பட்ட வினோத்துக்கு காதும் கேட்காது, வாயும் பேச முடியாதவர்.
இந்த வழக்கு தொடர்பாக சல்மானை போலீசார் தேடி வருகின்றனர்.

No comments:
Post a Comment