FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Saturday, November 28, 2015

காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மகளின் கற்பை பறித்து ஊரைவிட்டு துரத்திவிட்டார்கள்..! -நீதிக்கு நாதியில்லாத ஒரு குடும்பத்தின் கதை


காலம் வேகமாக சுழன்றுகொண்டிருக்கிறது. தினமும் புதுசு புதுசா வேணும் என்கிற எண்ண ஓட்டமே இன்றைக்கு எல்லோரையும் சூழ்ந்திருக்கிறது. பழையவைகளை பற்றி பேசவோ திரும்பி பார்க்கவோ யாருக்கும் நேரமில்லை அல்லது விருப்பமில்லை. அதற்காகவே மீடியாக்களும் புதியவைகளையே தேடி ஓடிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு ஒரு கொலையோ அல்லது பாலியல் வல்லுறவோ நடக்கிறது என்றால், நாளைய செய்தித்தாளோடு அது முடிந்துபோகும். படிக்கும் அந்த நிமிடம் மட்டும் வேண்டுமானால் உங்களுக்குள் கரிசனம் எட்டிப்பார்க்கலாம். அடுத்த நிமிடம் உங்களுக்கான வேலைகளில் பரபரப்பாகிவிடுவீர்கள்.

இழுத்தடிக்க விரும்பவில்லை. நாம் குற்றத்தின் பரபரப்பை மட்டுமே நுகர கற்று வைத்திருக்கிறோம் என்பதைத்தான் சொல்ல வருகிறேன். ஒவ்வொரு குற்றமும், பரபரப்போடு முடிந்துவிடுவதில்லை. அதற்கு பின்னனியில் வெளிச்சம்படாத வலிகள் நிறைந்திருக்கின்றன.

அப்படியான ஒரு சம்பவம் இது..

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையிலிருந்து சுமார் முப்பது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கொடகரைக்கு அருகில் உள்ளது கீழ்கொச்சூர் என்கிற கிராமம். மலைவாழ் மக்களை கொண்ட அந்த கிராமத்திலிருந்து வீரபத்ரப்பா என்பவர் குடும்பத்தோடு வெளியேற்றப்பட்டிருக்கிறார்.

சொந்த வீடு, பிறந்த மண் எல்லாவற்றையும் பிரிந்து.. இருதுக்கோட்டை என்கிற கிராமத்திற்கு, இடம்பெயர்ந்த வீரபத்ரப்பாவும் அவரது மனைவியும் காதுகேளாத மற்றும் வாய்பேச முடியாத மகளையும், ஏழாவது படிக்கும் மகனையும் வைத்துக் கொண்டு ஒரு பண்ணையில் கூலி வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். எதற்காக தெரியுமா..?

இருதுக்கோட்டை கிராமத்தில் மனைவி, மற்றும் குழந்தைகளோடு வேலை செய்து கொண்டிருந்த வீரபத்ரப்பாவை சந்தித்து பேசினோம்.

"போன வருஷம் டிசம்பர் மாசம் 25ம் தேதி, நான் எங்க வயல்ல வேலை செஞ்சுகிட்டு இருந்தேன். எம்மக நீலம்மா எனக்கு சாப்பாடு கொண்டுகிட்டு வந்துச்சி. சாயங்காலம் அஞ்சு மணிக்கு மேல இருக்கும்... நேரமாகிடுச்சி வீட்டுக்கு போம்மானு அனுப்பிவிட்டுட்டு பொழுது போனதுக்கு பிறகு நான் வீட்டுக்கு கிளம்பினேன். 'என்ன இவ்வளவு நேரமாச்சி இன்னும் புள்ளைய வீட்டுக்கு அனுப்பாம வேலை வாங்குறீங்களா/'னு கத்திகிட்டே என் பொண்டாட்டி வந்தா....எனக்கு ஒண்ணுமே புரியலை. 'அவ வீட்டுக்கு வந்து ஒரு மணிநேரத்துக்கு மேல இருக்குமே'னு சொன்னேன். 'என்ன சொல்றீங்க..? அவ வரலையே'னு எங்க வீட்ல பதற ஆரம்பிச்சிருச்சி. எம் பொண்ணுக்கு பிறந்ததுலேயிருந்தே காதும் கேட்காது வாயும் பேசமுடியாது. அதனால என்ன ஆச்சோனு பயந்து போய் வீட்டுக்கு ஓடினேன். அங்க பொண்ணு இல்ல. என்ன ஆச்சினு புரியாம திரும்பி வயலுக்கு தேடிக்கிட்டு ஓடினேன். இருட்டாகிடுச்சி டார்ச் லைட் அடிச்சிகிட்டே போனேன். வழியில இருந்த ஒரு புதர் சிதைஞ்சி இருந்துச்சி.

சந்தேகம் வந்து லைட் அடிச்சு பார்த்தேன். குழிக்குள்ள இருந்து ஒரு கால் மட்டும் நீட்டிகிட்டு இருந்துச்சி. எனக்கு உயிரே இல்ல. கிட்ட போய் பாத்தா எம்பொண்ணு சட்டையெல்லாம் கிழிஞ்சி, மயங்கி கிடந்தா எனக்கு என்ன பண்றதுனே தெரியல. தோளில் தூக்கி போட்டுகிட்டு வீட்டுக்கு ஓடிவந்தேன். வீட்டுக்கு வந்து பாத்தா பிறப்புறுப்பில் இருந்து ரத்தம் ஒழுகிகிட்டே இருந்துச்சி...மார்பையெல்லாம் கண்ணாபின்னானு போட்டு கடிச்சி, முகத்தை கீறி வச்சிருந்தாங்க. பொண்ணு ரொம்பநேரமாகியும், கண் முழிக்கவே இல்ல. ஒரு குடம் தண்ணிய ஊத்தி குளிப்பாட்டினோம். கண்ணு முழிக்கிறதுக்கு ரொம்ப நேரமாச்சி. எங்க ஊர்ல பஸ் வசதி கிடையாது. ராத்திரி நேரம்ங்கிறதால ஆஸ்பத்திரிக்கும் கூட்டிகிட்டு போகமுடியல. ராத்திரி முழுக்க எங்களுக்கு பொட்டு தூக்கம் இல்ல. அவகிட்ட என்ன நடந்துச்சினும் கேட்க முடியல.

'காலையில என்ன ஆச்சி.. யார் உன்ன இப்படி பண்ணதுனு..?' கேட்டோம். எங்க வீட்டுக்கு பக்கத்துலயே உள்ள சித்தலிங்கா, முத்தப்பா,மாதப்பா, சென்னபசப்பா ஆகிய நாலுபேரையும் காமிச்சு, இவுங்கதான் இப்படி பண்ணிட்டாங்கனு சைகையில சொல்லி அழுதா. எனக்கு வேதனை தாங்க முடியலை. தேன்கனிக்கோட்டை ஆஸ்பத்திரிக்கு தோள்லயே தூக்கிக்கிட்டு போனேன். அங்க போனதுக்கு பிறகு போலீஸ்காரங்க வந்து விசாரிச்சு கேஸ் போட்டாங்க. கம்யூனிஸ்ட் கட்சிக்காரவங்களுக்கும் விஷயம் தெரிஞ்சு போராட்டாம் பண்ணாங்க. அதுக்கு பிறகுதான், அவங்க நாலு பேரையும் அரெஸ்ட் பண்ணி ஜெயில்ல போட்டுட்டாங்க. அதனால கோபமான அவங்க சொந்தகாரவங்க எல்லாம் நாங்க பொய் கேஸ் கொடுத்துட்டதா வந்து மிரட்டுனாங்க. கேஸை வாபஸ் வாங்க சொன்னாங்க. இதை கம்யூனிஸ்ட் கட்சிகாரவங்ககிட்ட சொன்னதும் போலீஸ்ல பேசி எங்களுக்கு பாதுகாப்புக்காக ரெண்டு போலீஸ்காரவங்களை போட்ருந்தாங்க.

என் மகளை ஓசூர், தருமபுரினு கூட்டிகிட்டு போய் மெடிக்கல் டெஸ்ட் பண்ணிட்டு ஓசூர்ல ஒரு ஹோம்ல வச்சிருந்தாங்க. கொஞ்ச நாள் கழிச்சி, ஹோம்ல இருந்து வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்தேன். வீட்டுக்கு பின்னாடி நின்னுகிட்டு இருந்த என் பொண்ணை, அந்த நாலு பேரோட சொந்தகாரவங்க எல்லாம் சேர்ந்து இழுத்துட்டுப்போய் அடிச்சி கிணத்துல தள்ளிவிட பாத்தாங்க. சத்தம் கேட்டு ஓடிபோய் தடுத்துட்டோம். என் பொண்ணுக்கு பலமா அடிபட்டுடுச்சி. இது பாதுகாப்புக்கு வந்த போலீஸ்காரவங்களுக்கும் தெரியும். ஆனா, இதை அஞ்செட்டி இன்ஸ்பெக்டர் சிவலிங்கத்திடம் சொன்னதுக்கு, 'அதெல்லாம் இல்ல. நீ... பொய் சொல்ற'னு பூட்ஸ்காலால என் காலை மிதிச்சிகிட்டே, என் மூஞ்சில எச்சில் துப்புனார். என்னால எதுவும் செய்யமுடியலை.

ஆரம்பத்துல இருந்தே போலீஸ்காரவங்க அந்த நாலு பேரும் தப்பு செய்யலங்கிற மாதிரியே பேசுனாங்க. நான் பொய் சொல்லணும்னு என்ன அவசியம் இருக்கு..? யாராவது மகளை கற்பழிச்சிடாங்கனு பொய் சொல்லுவாங்களா..? என் மகளை கெடுத்த நாலு பேரோட சொந்தக்காரவங்க எங்களை ஊருக்குள்ள வரகூடாதுனு மிரட்டுறாங்க. எங்களுக்கு சொந்தம்னு சொல்லிக்க அந்த ஊர்ல யாருமே இல்ல. நாங்க என்ன பண்றதுன்னு தெரியல.உயிருக்கு பயந்துபோய் இங்கே வந்து கெடக்கிறோம்" என்கிறார் வீரபத்ரப்பா.

இடியை இறக்கிய தீர்ப்பு!

வீரபத்ரப்பா குடும்பத்திற்காக போராடிவரும் தமிழ்நாடு அனைத்துவகையான மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் முருகேசனிடம் பேசினோம்.

" ஒரு மாற்றுத்திறனாளி பெண் கொடூரமாக கற்பழிக்கப்பட்டிருக்கிறார், அவரது குடும்பத்தையே ஊர்விலக்கு செய்திருக்கிறார்கள். ஆனால், இந்த விஷயத்தில் காவல்துறை கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவே இல்லை. ஆரம்பத்திலிருந்தே குற்றவாளிகளுக்கு ஆதரவாகத்தான் செயல்படுகிறார்கள். காரணம், கைது செய்யப்பட்ட நான்குபேரும் காவல்துறையின் ஏஜெண்டுகள். கொடகரை கிராமத்தில் 500க்கும் மேற்பட மக்கள் வசிக்கிறார்கள். அந்த கிராமத்திற்கு போக்குவரத்துவசதி கிடையாது என்பதால் எந்த ஒரு விவகாரத்திற்கும் காவல்துறையினர் நேரடியாக அங்கு செல்ல மாட்டார்கள். சாராயம் விற்பதில் ஆரம்பித்து எல்லா சங்கதிகளுக்கும் மாமுல் வாங்கிகொடுப்பது வரை காவல்துறைக்கு எல்லாமுமாக இருந்தது இந்ந நான்குபேர்தான். அதனால் காவல்துறை அவர்களை காப்பாற்ற முயற்சி செய்கிறது. அதனால் நீதிமன்றத்தை நாடினோம் கடந்த 28.09.15 அன்று இந்த வழக்கை சி.பி.சிஐ.டி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என்.பிரகாஷ் அவர்கள் மேற்கோள் காட்டியிருக்கும் விஷயங்கள் அதிர்ச்சிகரமானவை.

அதில் 'பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை முன்விரோதம் காரணமாக நான்கு குற்றவாளிகளையும் பழிவாங்குவதற்காக, தன் மகள் கேட்கும் மற்றும் பேசும் திறனற்ற மாற்றுத்திறனாளி சிறுமி என்பதை பயன்படுத்தி பொய்யான தகவல்களை கூறி அனுதாபத்தை தேடுகிறார். கூரையின் மீது ஏறி நின்றுகொண்டு பொய்களை கூறி நீதிக்காக அழுகிறார்...' என்றெல்லாம் கூறி, மனுதாரர் தந்தையின் நடவடிக்கைகள் சந்தேகப்படும் விதமாக உள்ளதால் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு மாற்றுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தீர்ப்பில், "தன்மகள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டாள் என்று தந்தைகள் கூறுவது இந்திய நாட்டில் சகஜம், தந்தையே தன் மகளின் பிறப்புறுப்பில் காயத்தை ஏற்படுத்தியிருக்க கூடும்" என்றும் சொல்லி அதிர்ச்சியூட்டியிருக்கிறார். மனுதாரர் பொய்யை சொல்லுகிறார் என்று நீதிபதி எப்படி முடிவுக்கு வந்தார்... யாரை விசாரித்தார்...? என்று தெரியவில்லை. இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி விசாரித்தால் நியாயம் பிறக்காது என்பதால் சி.பி.ஐ.க்கு மாற்ற போராடிக்கொண்டிருக்கிறோம்" என்றார்.

மாற்றுத்திறனாளி பெண்ணின் கற்பு பறிபோனது மட்டுமல்ல... அந்த குடும்பத்தின் ஒட்டு மொத்த வாழ்கையுமே சிதைக்கப்பட்டுவிட்டது.

-எம்.புண்ணியமூர்த்தி

No comments:

Post a Comment