சென்னை, 03 November 2015
பி.இ., பாலிடெக்னிக்குகளில் சேர்ந்துள்ள மாணவிகள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை திட்டத்தை அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அறிவித்துள்ளது.
இந்தத் திட்டங்களின் கீழ் நாடு முழுவதும் பாலிடெக்னிக், பி.இ. படிப்புகளில் முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவிகளில் 4 ஆயிரம் பேருக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்கள் ஆயிரம் பேருக்கும் கல்லூரி கல்விக் கட்டணம் அல்லது ரூ. 30 ஆயிரம் ரொக்கம், 10 மாதங்களுக்கு மாதம் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை ஆகியவை வழங்கப்படும். ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 2015-16 கல்வியாண்டில் சேர்ந்துள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 6 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும். இதற்கு ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க நவம்பர் 23 கடைசித் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு www.aicte-india.org இணையதளத்தைப் பார்த்து தெரிந்துகொள்ளலாம்.

No comments:
Post a Comment