திருவண்ணாமலை, 03 November 2015திருவண்ணாமலையில் மருத்துவச் சான்றிதழ் வழங்க அலைக்கழிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள், அலுவலக நுழைவு வாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் சலுகைக் கட்டணத்தில் ரயில், பேருந்துகளில் பயணம் செய்வதற்கான பாஸ் நவம்பர் 2-ஆம் தேதியில் இருந்து வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது.
இந்த பாஸ் பெறவும், நலத் திட்ட உதவிகளைப் பெறுவதற்கான மருத்துவச் சான்றிதழ் பெறவும் ஏராளமான மாற்றுத் திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்திருந்தனர்.
ஆனால், மருத்துவச் சான்றிதழ் வழங்க ஒரே ஒரு மருத்துவர் மட்டுமே வந்திருந்தார். அவரால் வந்திருந்த அனைவருக்கும் சான்றிதழ் வழங்கமுடியவில்லை. சிறிது நேரத்தில் அந்த மருத்துவரும் புறப்பட்டுச் சென்று விட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த மாற்றுத் திறனாளிகள் சில வாரங்களாகவே மருத்துவச் சான்றிதழ் பெற இதுபோல அலைக்கழிக்கப்படுவதாகக் கூறி கோஷம் எழுப்பினர்.
தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக நுழைவாயிலில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
அப்போது, மாற்றுத் திறனாளிகள் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகள் செய்யக் கோரி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் சங்க நிர்வாகிகள் ரமேஷ்பாபு, செல்வம், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர் கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர், அதிகாரிகளின் சமாதானத்தை ஏற்று போராட்டம் கைவிடப்பட்டது.

No comments:
Post a Comment