FLASH NEWS: TNPSC குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்ற 10,701 பேர் அரசு பணிகளுக்கு தேர்வு..!! “TNPSC ஆணையம் தகவல்”..! ***** அடுத்தடுத்து ராக்கெட் ஏவும் வேலை இருக்கு; இந்தாண்டு இஸ்ரோ பயங்கர பிஸி! ***** நகராட்சி ஆகிறது கன்னியாகுமரி: வள்ளுவர் சிலை வெள்ளி விழாவில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு ***** பயன்பாட்டில் இல்லாத கணக்குகளை குறிவைத்து மோசடி நடப்பதை தடுக்கும் நோக்கில், வங்கிக் கணக்குகளை மூடுவதற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை இன்று (ஜன. 1, 2025) முதல் அமல்படுத்த வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. ***** அதானி நிறுவனம் குறைந்த விலையை குறிப்பிட்டும் ஸ்மார்ட் மீட்டர் டெண்டரை ரத்து செய்தது மின்வாரியம் ***** பாகிஸ்தான் ராணுவ தளத்தை ஒரே நாளில் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் ***** தமிழகத்தில் 2024-25 ஆம் கல்வியாண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ள ஜனவரி 2 ஆம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ***** தமிழகம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காக நாளையும், 10ம் தேதியும் ரேஷன் கடைகள் செயல்படும்: கூட்டுறவுத்துறை அறிவிப்பு ***** விண்வெளியில் இரண்டு கருவிகளை ஒன்றாக இணைப்பது இருப்பதிலேயே ரொம்ப கஷ்டமான வேலை. இதுவரை ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள்தான் இந்த டெக்னாலஜியில் கெத்து காட்டி வந்திருந்தன. இந்நிலையில், இந்தியா தற்போது இதை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறது. இதன் மூலம் சீனாவுக்கு சவால் விட்டிருக்கிறது. ***** மும்பையில் நோயாளி ஒருவருக்கு துப்புரவுப் பணியாளர் இசிஜி சோதனை நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ***** Farmers Loan: 2025 புத்தாண்டில் விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்..! இன்று முதல் அமலாகும் புதிய கடன் திட்டம் ***** இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் படைகள் தாலிபான் படைகளிடம் அடுத்தடுத்து சரண்டர் ஆக தொடங்கி உள்ளது. தாலிபான் படைகள் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள் காரணமாக பாகிஸ்தான் படைகள் தாலிபான்களிடம் சரண் அடைந்து வருவதாக கூறப்படுகிறது. ***** இந்த மாதத்தில் 100வது ராக்கெட் ஏவப்படும்... இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவிப்பு ***** செஸ் வீரர் குகேஷ், ஹாக்கி வீரர் ஹர்மன்ப்ரீத் சிங், பாரா அத்லெட் ப்ரவீன் குமார், துப்பாக்கி சுடுதல் வீராங்கனை மனுபாகர் ஆகிய நால்வருக்கும் ‘கேல் ரத்னா’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ***** ரூ.69,515 கோடி நிதி ஒதுக்கீடு.. புத்தாண்டு தினத்தில் விவசாயிகளுக்கு குட் நியூஸ் சொன்ன மத்திய அரசு! ***** திருமணங்களை, புதுமண தம்பதிகளே ஆன்லைனில் பதிவு செய்யலாம்- தமிழக அரசு திட்டம் *****

Wednesday, November 4, 2015

தமிழ்நாடு அரசில் 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன


தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறையில் நிரப்பப்பட உள்ள 859 கால்நடை பாரமரிப்பு உதவியாளர் பணியிடங்களுக்கு நிரப்ப தகுதியுள்ளோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 859

பணி: கால்நடை பராமரிப்பு உதவியாளர்

பணியிடம்: தமிழ்நாடு

பிரிவு வாரியான காலியிடங்கள் விவரம்:

SCA - 26

SC - 129

ST - 09

MBC - 172

BC - 227

BCM - 30

GT - 266

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1400

தகுதி: குறைந்த பட்ச கல்வித்தகுதி 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சைக்கிள் ஓட்ட தெரிந்திருக்க வேண்டும். கால நடைகளை கையாள தெரிந்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2015 தேதியின்படி குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்சம் அருந்ததியர், தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வகுப்பினர்களுக்கு 35 ஆகும். 10, +2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு அதிகபட்ச வயது 40, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர்(முஸ்லிம்) ஆகிய வகுப்பினருக்கு அதிக பட்ச வயது 32 ஆகும். 10, +2 தேர்வு பெற்றிருப்பின் அதிக பட்ச வயது 34, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு அதிக பட்ச வயதுவரம்பு இல்லை.

பொது பிரிவினருக்கு அதிக பட்சவயது 30 ஆகும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை இயக்குநர், கால்நடை பராமரிப்பு(ம) மருத்துப்பணிகள், மத்திய அலுவலகக் கட்டிடம், பகுதி-2, டி.எம்.எஸ் வளாகம், சென்னை-6 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி:11.11.2015

விண்ணப்ப மேல் உறையின் மீது "கால்நடை பராமரிப்பு உதவியாளர் தேர்வு 2015" என பெரிய எழுத்துகளில் தவறாது குறிப்பிட்டு அடிக்கோடிட வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை AXIS வங்கி செலுத்துச் சீட்டின் வாயிலாக AXIS வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தி செலுத்துச் சீட்டின் அத்தாட்சியினை (அசல்) விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பிட வேண்டும்.

அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் சென்னையில் மாற்றத் தக்க வகையில் Director, Animal Husbandry & Veterinary Services, Chenna's என்ற பெயருக்கு வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டும்.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள், திருநங்கைகளுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்களிக்கப்படுகிறது.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வில் அதிக மதிப்பெண் பெரும் விண்ணப்பதரார்களின் சான்று சரிபாக்கப்பட்டு இனசுழற்சி அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பங்கள் போன்ற விவரங்கள் அறிய http://cms.tn.gov.in/sites/default/files/AH_asst_appl_301015.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.
CLICK HERE

No comments:

Post a Comment