FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Monday, November 9, 2015

குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடு கண்டறியும் மையம்

தஞ்சாவூர், 09 November 2015, 
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையில் ரூ. 21.10 லட்சத்தில் அமைக்கப்பட்ட குழந்தைகளுக்கான செவித்திறன் குறைபாடுகள் கண்டறியும் தொடக்க நிலை பரிசோதனை மையத்தை வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.

பிறகு அமைச்சர் தெரிவித்தது: மாற்றுத்திறனாளிகள் நலத் துறைக்கு தமிழக முதல்வர் பல திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். தற்போது மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி நலத் துறை சார்பில், ரூ. 21.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து, 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் செவித்திறன் குறைபாடுகளைக் கண்டறிவதற்கான ஆரம்பநிலை பரிசோதனை மையத்தைத் தொடங்குவதற்கு முதல்வர் உத்தரவிட்டார்.

இதன்படி, தற்போது முழுப் பணிகளும் நிறைவு பெற்று ஆரம்ப நிலை பரிசோதனை மையம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதில், ரூ. 16 லட்சத்தில் பரிசோதனைக் கருவிகளும், ரூ. 5.10 லட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், குழந்தைகளுக்கு செவித்திறன் குறைபாடுகள் உடனே கண்டறியப்பட்டு அவர்களுக்குத் தேவையான காது கருவிகள் பொருத்தி பேச்சு பயிற்சி அளிக்க முடியும். இதன்மூலம் செவித்திறன் குறைபாடு உடைய குழந்தைகள் மற்ற சராசரி குழந்தைகளைப் போல பள்ளிக்குச் சென்றுவர இயலும் என்றார் அமைச்சர்.

பிறகு, 30 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 17.33 லட்சத்தில் மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வாகனங்களும், 725 பயனாளிகளுக்கு மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித் தொகையாக ரூ. 34.50 லட்சத்துக்கான ஆணைகளும் வழங்கப்பட்டன.

மேலும், தோட்டக்கலைத் துறை சார்பில் தேசிய தோட்டக் கலை இயக்ககத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு ரூ. 3.30 லட்சத்தில் மினி டிராக்டர், ரூ. 1.61 லட்சத்தில் 2 பவர் டில்லர்கள் ரூ. 1.55 லட்சம் மானியத்துடன் வழங்கப்பட்டன.

மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் தலைமை வகித்தார். மயிலாடுதுறை தொகுதி மக்களவை உறுப்பினர் ஆர்.கே. பாரதிமோகன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் எம். ரெங்கசாமி (தஞ்சாவூர்), எம். ரெத்தினசாமி (திருவையாறு), இரா. துரைக்கண்ணு (பாபநாசம்), மேயர் சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித் தலைவர் அமுதாராணி ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment