29.11.2015,மாற்றுத்திறனாளிகள் உலகக்கிண்ணப் போட்டியில் இந்தியா சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய இம்ரான் ஷேக் பிழைப்புக்காக கச்சோரி விற்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
கடந்த 2005ம் ஆண்டு காது கேளாத மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான உலகக்கிண்ணப் போட்டி நடைபெற்றது. இதில் இம்ரான் ஷேக் அசத்தலாக செயல்பட்டார்.
ஆப்கானிஸ்தான் (70), நியூசிலாந்து (60) அணிகளுக்கு எதிரான போட்டியில் அரைசதம் விளாசிய இம்ரான், பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதியில் 62 ஓட்டங்கள் குவித்து அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்து சென்றார்.
இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 40 ஓட்டங்கள் மற்றும் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணி உலகக்கிண்ணம் வெல்ல உதவினார்.
இந்த நிலையில் தற்போது பிழைப்புக்கு வழியில்லாமல் தனது மனைவி ரோஜாவுடன் சேர்ந்து பழைய பாத்ரா சாலையில் தள்ளுவண்டியில் வைத்து கச்சோரி விற்று வருகிறார்.
கிரிக்கெட் மீது தீவிர ஆர்வம் உள்ள போதிலும் போதிய நிதி வசதி இல்லாததால் தொடர முடியவில்லை என்று குறிப்பிட்ட இம்ரான், தற்போது தனக்கு குஜராத் சுத்திகரிப்பு ஆலையில் தற்காலிக பணி கிடைத்திருப்பதாகவும், கூடுதல் வருமானத்திற்காக மனைவியுடன் சேர்ந்து இதை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

No comments:
Post a Comment