தேவகோட்டை, 02 November 2015
தேவகோட்டை சட்டப் பணிகள் குழுவின் சார்பில் மாற்றுத் திறனாளிக்களுக்கான சட்ட விழிப்புணர்வு முகாம் சங்கரபதி கோட்டையில் உள்ள நிர்மல் சிறப்பு பள்ளியில் நடைபெற்றது.
முகாமில் சட்டப்பணிக் குழுவின் தலைவர் மற்றும் சார்பு நீதிபதி கிருபாகரன் மதுரம் தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிபதி கணேசன், குற்றவியல் நீதித்துறை நடுவர் விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். குற்றவியல்நீதித்துறை நடுவர் விஜயகுமார் பேசுகையில், மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான நலத்திட்டங்களைப் பெறுவதில் சிக்கல் ஏதும் ஏற்பட்டால், சட்டப்பணிகள் குழு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்த்துவைக்கப்டும் என்றார்.
சட்டப் பணிகள் குழுவின் நோக்கங்கள் பற்றிய கையேடுகளை அவர் வழங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக கண்காணிப்பாளர் ஆறுமுகம், மத்திய, மாநில அரசுகள் மாற்றுத்திறனாளிகளுக்காக செயல்படுத்திவரும் நல திட்டங்கள் பற்றியும், அதனை எப்படி பெறுவது என்பது குறித்து விளக்கமளித்து அதற்கான கையேடுகளை வழங்கினார். குழுவின் நிர்வாக உதவியாளர் முரளிதரன் நிகழ்ச்சிகளை தொகுத்தார்.
நிகழ்ச்சியில், பள்ளியின் தாளாளர் சாந்தி வரேவற்றார். வழக்குரைஞர்கள் ராமு,கணேசன் மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment