கரூர், 18 November 2015
கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியை மாவட்ட ஆட்சியர் ச. ஜெயந்தி தொடங்கி வைத்தார்.
கரூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடைபெற்ற போட்டிக்கு தலைமை வகித்து, போட்டிகளை தொடங்கிவைத்து அவர் கூறியது:
இன்று நடைபெறும் விளையாட்டுப் போட்டியில் கை, கால் ஊனமுற்றோர், பார்வையற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டோர் மற்றும் காது கேளாதோர் என சுமார் 250-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு 50 மீ., 100 மீ., 200 மீ., 400 மீ ஓட்டப்பந்தயங்கள், குண்டு எறிதல், நீளம் தாண்டுதல், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படுகிறது.
இதில் வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட உள்ளன. மாவட்டத்தில் ஒவ்வோர் ஆண்டும் நடைபெறும் விளையாட்டு போட்டியில் மாற்றுத்திறனாளிகள் கட்டாயம் பங்கேற்று தங்கள் திறமையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்றார். நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் மு. அருணா, விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் துறை மண்டல முதுநிலை மேலாளர் கீதாஞ்சலி ரத்னமாலா, மாவட்ட விளையாட்டு அலுவலர் புண்ணியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment