கோலார் தங்கவயலில் வருகிற 7-ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் கீழ் இயங்கும் தொழில்கல்வி மறுவாழ்வு மையம் சார்பில், கோலார் தங்கவயலில் உள்ள திம்மையா பொறியியல் கல்லூரி வளாகத்தில் வருகிற 7-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
இந்த முகாமில் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம்சாரா, நிதி, ஆட்டோமொபைல், மெக்கானிக்கல் துறைகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
வேலைவாய்ப்பு முகாமில் எஸ்எஸ்எல்சி, பியூசி, ஐடிஐ, பட்டயம் படித்தோர், இளநிலை, முதுநிலைப் பட்டதாரிகள், பொறியியல் பட்டதாரிகள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொள்ளலாம்.
புதியவர்கள் முதல் ஓராண்டு வேலை அனுபவம் கொண்டவர்கள் இந்த முகாமில் பங்கேற்கலாம். சுயவிவரக் குறிப்பு 6 படிகள், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் 6 படிகள், அசல் மற்றும் நகல் கல்விச் சான்றிதழ்கள், ஆதார் அட்டை, பான் அட்டை, ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் போன்ற அடையாள அட்டைகளின் நகல்களை முகாமில் கலந்து கொள்பவர்கள் எடுத்து வர வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு 9901526562 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment