18.11.2015, திருச்சி, :
திருச்சியில் நடந்த தேசிய காது கேளாதோர் தின கவன ஈர்ப்பு விழிப்புணர்வு பேரணியில் அரசுத்துறை தேர்வில் 1 சதவீத இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வலியுத்தபட்டது. திருச்சியில் மாவட்ட காது கேளாதோர் நலச்சங்கம் சார்பில் தேசிய காது கேளாதோர் தின கவன ஈர்ப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. மாவட்ட தலைவர் ரமேஷ்பாபு தலைமை வகித்தார். துணைத்தலைவர் கோவிந்தகிருஷ்ணன், செயலாளர் நாகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் திருச்சி மாவட்டத்தில் உள்ள காதுகேளாதோர் சிறப்பு பள்ளியை உயர்நிலைப்பள்ளியிலிருந்து மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசுத் துறைத் தேர்வில் 4வது மற்றும் 4வது குரூப் தர நிலையில் அரசு உத்தரவின்படி 1சதவீத இடஒதுக்கீட்டினை அமல்படுத்த வேண்டும். காதுகேளாதோர் சிலருக்கு உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது. அதை நிலுவையுடன் சேர்த்து உடனடியாக வழங்க வேண்டும். குறைதீர் மனுநாளில் வாரம் ஒருமுறை திங்கள்கிழமை கலெக்டர் அலுவலகத்தில் நடக்கும் குறைதீர் கூட்டத்தில் காதுகேளாதோர் குறைகளை கேட்டு செய்தியை பரிமாற்றம் செய்ய ஒரு நபர் கட்டாயம் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மொபைலில் எஸ்எம்எஸ்க்கு சிறப்பு சலுகையில் அனைத்து நாட்களிலும் காதுகேளாதோருக்கு வழங்க வேண்டும், பண்டிகை, சிறப்பு நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வழியுறுத்தப்பட்டது. கூட்டத்திர் நிர்வாகிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக பொருளாளர் புஷப்நாதன் வரவேற்றார். செந்தில்வடிவேல் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment