FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, November 10, 2015

திருமண உதவித்தொகை கிடைக்காத மாற்றுத் திறனாளிகள்

கடலூர், 10 November 2015
கடலூர் மாவட்டத்தில் திருமண உதவித்தொகை கிடைக்காமல் மாற்றுத் திறனாளிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தமிழக அரசு மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாதாந்திர உதவித்தொகை, காதொலி கருவிகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது.

மேலும், பல்வேறு தொழில் பயிற்சிகள், மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி, காதுகேளாத குழந்தைகள், பார்வைத் திறன் குறைபாடுடைய குழந்தைகளுக்கான ஆரம்ப கால பயிற்சி உள்ளிட்டவைகளை வழங்கி வருகிறது.

மேலும், சிறந்த தொண்டு நிறுவனங்கள், மாற்றுத் திறனாளிகளுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.

இதில், மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்துகொள்ளும் சாதாரண நபருக்கு ரூ.25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 4 கிராம் தங்கம் வழங்குகிறது.

பட்டம், பட்டய படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் 4 கிராம் தங்கமும் வழங்குகிறது. இதில், பாதித்தொகை ரொக்கமாகவும் மீதித் தொகை 5 ஆண்டுகளுக்குப் பின்னர் எடுக்கும் வகையில் பத்திரமாகவும் வழங்கப்படும்.

ஆனால், இந்தத் திருமண உதவித்தொகை கடலூர் மாவட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளாக வழங்கப்படவில்லை என்ற புகார் உள்ளது.

மாவட்டத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 60 ஆயிரம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதில், 44 ஆயிரம் பேருக்கு தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகளை திருமணம் செய்து கொள்வது தொடர்பாக சமூகத்தில் போதுமான விழிப்புணர்வு இல்லாத நிலையில் அவர்களுக்கான திருமண உதவித்தொகையும் சரியாக கிடைக்கவில்லை என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள் நலச் சங்கத்தினர்.

கடலூர் மாவட்டத்தில் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் 69 மாற்றுத் திறனாளிகள் திருமணம் முடிந்து அதற்கான உதவித்தொகைக்கு விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள்.

இவர்களில் 38 பேர் பட்டதாரிகளாவர். மாற்றுத் திறனாளிகளுக்கு உதவிடும் வகையில் இத்தொகையை விரைந்து வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் நலச் சங்கச் செயலர் பொன்.சண்முகம்.

இதுகுறித்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அலுவலக வட்டாரங்கள் தெரிவிக்கையில், 69 பேருக்கும் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறையுடன் இவர்களை இணைத்து வழங்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

எனவே, விரைவில் உதவித்தொகை கிடைத்திட வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment