FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, November 30, 2015

இந்தியா முழுவதும் மாற்று திறனாளிகளுக்கு ஒரே அடையாள அட்டை


கன்னியாகுமரி: கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரா வளாகத்தில் அனைத்து வித மாற்றுத் திறனாளிகளுக்கான அமைப்பான சக்‌ஷம் சார்பில் 8வது தேசிய அளவிலான மாநாடு நேற்று முன்தினம் (27ம் தேதி) தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று சமூக நீதி ஆதாரம் அளித்தல் துறை அமைச்சர் தல்வர்சந்த் கெலாட் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். விழாவில் அவர் பேசியதாவது: வெளிநாட்டில் நடந்த விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டு மாற்று திறனாளிகள் 173 பேர் பதக்கம் பெற்றுள்ளது பாராட்டுக்குரியது. இந்தியாவில் 5 இடங்களில் மாற்று திறனாளிகளுக்காக விளையாட்டு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 3ம்தேதி பிரதமர் மோடி சுகம்யா பாரத் யோசனா எனும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மாற்று திறனாளிகளுக்கான இத்திட்டம் 50 நகரங்களில் தொடங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் 100 கட்டிடங்கள் கட்டப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ வசதி உள்பட அனைத்து வசதிகளும் கிடைக்கும்.

85 சதவீத பாதிப்பு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு தற்போது அரசு சார்பில் மோட்டார் சைக்கிள் வழங்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் வேறு மாநிலங்களுக்கு செல்லும் போது தங்களிடம் இருக்கும் மாற்றுத்திறனாளி அட்டையை பயன்படுத்தி பல்வேறு பலன்கள் பெற முடியாமல் உள்ளது. இதை கருத்தில் கொண்டு இந்தியாமுழுவதும் ஒரே வடிவிலான அடையாள அட்டை திட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். கை, கால் இழந்த மாற்று திறனாளிகளுக்கு நவீன இயந்திரம் வழங்க ஜெர்மனி நாட்டு அரசுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். இந்த மாநாட்டில் இந்தியா முழுவதும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment