![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgszIqCyAxH5bMGD5A-1a7XJ_7N031XQKCRnAnEJ5gIiZrbdsmBRfWDdcBa1943LUY2GyxvKV2J0tgSSb5RMDwiB07TUeQREFqrB0ZoWb8_qZ4wzLsOqehRITiyOAuHCV1avMtg9K2rEU2Y/s1600/%25E0%25AE%25A4%25E0%25AF%2587%25E0%25AE%25A9%25E0%25AE%25BF+%25E0%25AE%25AE%25E0%25AE%25BE%25E0%25AE%25B5%25E0%25AE%259F%25E0%25AF%258D%25E0%25AE%259F%25E0%25AE%25AE%25E0%25AF%258D.jpg)
19.11.2015. ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டியில் மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு ஆலோசனை மற்றும் பயிற்சி முகாம் நடந்தது. தேனி மாவட்ட புதுவாழ்வுத்திட்டம் சார்பில் ஆண்டிபட்டி மற்றும் போடி வட்டார மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கான முகாமில் புதுவாழ்வுதிட்ட மேலாளர் கழுகாசலமூர்த்தி தலைமை வகித்தார். நூறுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். கம்ப்யூட்டர், தையல் ஜர்தோஷ், வீட்டு உபயோக பொருட்கள் பழுது நீக்குதல், மின் சாதன பொருட்கள் பழுது நீக்குதல், கிராமிய கைவினைப்பொருட்கள் தயாரித்தல், செவிலியர் உதவியாளர் ஆகியவற்றில் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு ஏற்படுத்திக்கொள்வதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment