FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Thursday, November 19, 2015

ஆடைகள் முதல் மரப்பொருள்கள் வரை



18.11.2015, ஆடைகள், மண்பாண்டங்கள், மரப்பொருள்கள், கண்ணாடி போன்றவற்றை வண்ண ஓவியங்கள் மூலம் அழுகுப்படுத்தத் தெரிந்தால், அதன் மூலம் நம்முடைய பொருளாதாரத்தையும் உயர்த்திக் கொள்ள முடியும் என்கிறார் கோவையைச் சேர்ந்த வண்ண ஓவியங்கள் வரைவதற்கு கற்றுக் கொடுக்கும் தொழில்நுட்ப வல்லுநர் கு.வசந்தா.

காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க வந்த அவர், ஒரே நாளில் ஓவியம் வரைவதற்கும், வண்ணம் தீட்டுவதற்கும் கற்றுக்கொடுத்தார். ஓவியம் வரைதல் குறித்தும், அதன் மூலம் கிடைக்க கூடிய வேலைவாய்ப்புகள் குறித்தும் அவரிடம் கேட்டபோது:

""மூலப் பொருள்களைவிட, அதனை மதிப்பு கூட்டப்பட்டப் பொருளாக மாற்றும்போது அதிக லாபம் பெற முடியும். அதேபோல், ரூ.200க்கு பெறுமான சேலையில், வண்ண ஓவியங்களை வரையும் போது அதன் மதிப்பை ரூ.700 முதல் ரூ.900 வரை உயர்த்தலாம்.

சேலை மட்டுமின்றி, குழந்தைகளுக்கான ஆடைகள், டி-சர்ட், மெத்தை விரிப்பு, தலையணை உரை ஆகியவற்றிலும், ஓவியம் தீட்ட முடியும். ஏற்கெனவே பயன்படுத்திய சேலைகள் பழமையாகத் தெரிந்தால், அந்த சேலைகளில் ஓவியங்களை வரைந்து புதுப்பொலிவுடன் கூடுதல் நாள்களுக்கு பயன்படுத்த முடியும்.

அக்ரிலிக், பேர்ல், பேர்ல் மெட்டாலிக், ஸ்பார்க்லிங் பேர்ல், 3டி கிளட்டர், 3டி பேர்ல் என 6 வகையான வண்ணங்களைப் பயன்படுத்தி ஓவியம் தீட்ட முடியும். கூடுதலாக அலங்கரிக்க வேண்டுமெனில், கற்கள், கண்ணாடிகள் பதித்துக் கொள்ளலாம். சேலைகளின் பயன்பாடு குறைந்தாலும், சல்வார், சுடிதார் போன்ற நவீன ஆடைகளிலும் இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும்.

எம்ராய்டரி டிசைன்ஸ் போன்ற தோற்றங்களை ஓவியம் மூலம் ஏற்படுத்த முடியும். வடிவமைக்கப்பட்ட ஆடைகளில் எம்ராய்டரி டிசைன்ஸ் வடிவமைப்பது கடினம். ஆனால், எம்ராய்ட்ரி ஓவியங்களை, ஆயத்த ஆடைகளிலும் வரைய முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம்.

ஓவியம் வரையத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்தத் துறையில் சாதிக்க முடியும் என அவநம்பிக்கை கொள்ள வேண்டாம். ஓவியக் கலை தெரியாதவர்களுக்கு, கார்பன் மூலம் ஓவியம் வரைவதற்கு வாய்ப்புகள் உள்ளன. 16 வயதிற்கு மேற்பட்டவர்களாக இருந்தால், வண்ண ஓவியங்கள் தீட்டும் பயிற்சியை எளிதாக பெற முடியும். மாற்றுத் திறனாளிகள் போன்றவர்கள், தையல் மிஷன்களை இயக்குவது கடினம். ஆனால், ஓவியம் வரைந்து, வண்ணம் தீட்டுவது என்பது எளிமையானது.

துணிகளில் ஓவியம் வரைவதற்கு தரமான மைகளைப் பயன்படுத்தும்போது, அந்தத் துணி கிழியும் வரை ஓவியமும் அழியாது. துணிகளைப் போல், மரப் பொருள்கள், மண் பாண்டங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றிலும் ஓவியம் வரையலாம்.

ரூ.50க்கு கிடைக்கும் மண் தொட்டியில் ஓவியம் தீட்டி, அலங்காரப் பொருளாக மாற்றும் போது அதன் மதிப்பு ரூ.500க்கு மேற்பட்டதாக உயரும். வண்ண ஓவியங்கள் வரைவதன் மூலம் ஆண், பெண் என இருபாலரும் நல்ல வேலைவாய்ப்பினைப் பெற முடியும்'' என்கிறார் வசந்தா.

No comments:

Post a Comment