FLASH NEWS: உக்ரைனின் மற்றொரு பிராந்தியத்தின் கிராமங்களுக்குள் புகுந்த ரஷியப் படைகள்..! ***** அமெரிக்காவில் இந்திய பொருட்கள் மீதான 50 சதவீத வரி விதிப்பு அமலுக்கு வந்தது ***** வரி விதிப்பு மிரட்டல்: நான்கு முறை போன் செய்த டொனால்டு டிரம்ப்- பேச மறுத்த மோடி..! ***** செல்பி எடுப்பதற்கு ஆபத்தான நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளது ***** சீனாவை அழிக்கும் முடிவை என்னால் எடுக்க முடியும்; ஆனால்... டிரம்ப் பரபரப்பு பேச்சு ***** சுதந்திர தின வாழ்த்து: பிரதமர் மோடிக்கு உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி ***** பல நாடுகளில் ஆயுத உற்பத்தி தொழிற்சாலை அமைத்துள்ளோம் ; ஈரான் தகவல் ***** ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் புதின், மோடி பங்கேற்பு - சீனா தகவல் ***** 50 சதவீத வரி விவகாரம்; பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை அவசர ஆலோசனை ***** ராஜஸ்தானில் தேர்வு மோசடியில் ஈடுபட்ட 415 பேருக்கு வாழ்நாள் தடை ***** 37 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழக அரசு வலியுறுத்தல் ***** ஹூண்டாய் காரில் உற்பத்தி குறைபாடுகள் உள்ளதாக கூறி பதிந்த வழக்கில் பிராண்ட் அம்பாசிடர்களான ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் மீது எப்.ஐ.ஆர். பதிவு ***** ராஜஸ்தானில் டைனோசர்கள் காலத்துக்கு முந்தைய உயிரினத்தின் எலும்புக்கூடுகள்-முட்டை கண்டுபிடிப்பு *****

Wednesday, November 4, 2015

உதவித் தொகைகளை ரத்து செய்தால் நடவடிக்கை: அமைச்சர் பி.பழனியப்பன்

அரூர், 04 November 2015
தகுதியான பயனாளிகளின் உதவித் தொகைகளை ரத்து செய்தால் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

பாப்பிரெட்டிப்பட்டி சட்டப்பேரவைத் தொகுதி, மொரப்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கிராமப் பகுதிகளில் மக்களை நாடி குறைதீர்க்கும் சிறப்பு முகாம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் அமைச்சர் பி.பழனியப்பன் பேசியது: தமிழக அரசு சார்பில் விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், முதியோர் உள்ளிட்டோருக்கு உதவித் தொகைகள் வழங்கப்படுகின்றன. இந்த உதவித் தொகையில் மத்திய அரசு ரூ.200-ம், தமிழக அரசு ரூ.800-ம் வழங்குகிறது. அரசு உதவித் தொகை பெறுவதில் முறைகேடு இருக்கக் கூடாது என்பதற்காக அண்மையில் அனைத்து உதவித்தொகை பெறும் பயனாளிகளின் வருவாய், குடும்பப் பின்னணி, நிலம் வைத்துள்ளாரா, வசதிப் படைத்தவர்களா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது விதவைகள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள், நிலமற்றத் தொழிலாளர்கள் உள்ளிட்ட பலரின் உதவித் தொகைகள் ரத்து செய்திருப்பது தெரியவருகிறது.

இதுகுறித்து பொதுமக்களிடமிருந்து ஏராளமான புகார்கள் வருகின்றன. எனவே, அரசு உதவித் தொகைகளை ரத்து செய்யும் போது சரியான காரணம் இருந்தால் மட்டுமே ரத்து செய்ய வேண்டும். அரசு அதிகாரிகளின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்படக்கூடாது. தருமபுரி மாவட்டத்தில் முதியோர் உதவித் தொகை உள்ளிட்ட அரசு உதவித் தொகை பெற்று வந்து, தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பயனாளிகளின் மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தப்படும் என்றார்.

இதையடுத்து கேத்துரெட்டிப்பட்டி, வேப்பிலைப்பட்டி, காவேரிபுரம், தாளநத்தம், புட்டிரெட்டிப்பட்டி உள்ளிட்ட 18 குக்கிராமங்களில் அமைச்சர் பி. பழனியப்பன் பொதுமக்கள் குறைகளை நேரில் கேட்டறிந்தார். அப்போது தெருவிளக்குகள், குடிநீர் வசதி, நூலகம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதிய பேருந்து வசதி, 35 கிலோ ரேஷன் அரிசி, அரசு கால்நடை மருந்தகம் உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பாக பொதுமக்கள் மனு அளித்தனர். இந்த மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அரசுத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், தாதனூரில் 32 பயனாளிகளுக்கு தலா 4 ஆடுகள் வீதம் ரூ.4.12 லட்சம் மதிப்பில் விலையில்லா ஆடுகளை அமைச்சர் வழங்கினார்.

முகாமில், மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் லலிதா குப்புசாமி, துணைத் தலைவர் சாரதி செந்தில்குமார், உதவிச் செயற்பொறியாளர் ஏ.ராதாகிருஷ்ணன், வட்டாட்சியர் கோ.மணி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.மாதையன், எம்.ஜெயராமன், அதிமுக ஒன்றியச் செயலர்கள் வி.சி.கௌதமன், ஜி.எஸ்.குப்புசாமி, ஆர்.பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment