கன்னியாகுமரி மாவட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (நவ. 20) நடைபெறுகிறது.
நாகர்கோவிலில் உள்ள அண்ணா விளையாட்டரங்கில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ள இப்போட்டிகள் இருபாலருக்கும் தனித்தனியே நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. அடையாள அட்டை அவசியம். தடகளம், மினி கூடைப்பந்து எறிதல், 100 மீட்டர் நீளம் தாண்டுதல், சக்கர நாற்காலி, குழு விளையாட்டு, இறகுப் பந்து, மேஜைப் பந்து, குண்டு எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், டென்னிஸ் பந்து எறிதல், வாலிபால் பந்து, கபடி உள்ளிட்ட பிரிவுகளில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்.
முதல் இரண்டு இடங்களைப் பெறுவோருக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ரா. சவாண் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment