FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Tuesday, November 10, 2015

நெல்லையில் 12இல் சிறப்பு தொழில் ஊக்குவிப்பு முகாம்

திருநெல்வேலி, 10 November 2015
திருநெல்வேலியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் இம்மாதம் 12ஆம் தேதி சிறப்புத் தொழில் ஊக்குவிப்பு முகாம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக, ஆட்சியர் மு. கருணாகரன் வெளியிட்ட செய்தி: பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் (அதிகபட்சம் ரூ. 25 லட்சம் வரை) தமிழக அரசு மானியமாக வழங்குகிறது. ரூ. 1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு வங்கிகள் வழியாக கடன் வழங்கும் "நீட்ஸ்' என்ற திட்டம் மாவட்ட தொழில் மையம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆதிதிராவிடப் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ளோர், பின்தங்கிய வகுப்பினர், மாற்றுத்திறனாளிகள், சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஆண், பெண், இருபாலரும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்.

வியாபாரம், வாகனம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த சேவைத் தொழில்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடன் பெற முடியாது. வங்கியிலிருந்து கடன் அனுமதிக் கடிதம் கிடைத்த பின்னர் பயனாளிகளுக்கு, ஒரு மாத கால மேலாண்மைப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சிக்குப் பிறகு பயனாளிகள் தமது பங்கு மூலதனமாக திட்ட முதலீட்டில் சிறப்பு பிரிவினர் 5 சதம், பொதுப் பிரிவினர் 10 சதம் செலுத்தி வங்கியில் நிதியுதவி பெறலாம்.

அப்போது, மாவட்டத் தொழில் மையம் மூலம் 25 சதவீத மானியத் தொகை வங்கிக்கு வழங்கப்படும். 25 சதவீத மானியத்துடன் (அதிகபட்சம் ரூ25 லட்சம் வரை) தகுதியிருப்பின் மேலும், வரிச் சலுகை, மின் கட்டணத்தில் மானியம், மின்னாக்கி மானியம், வட்டி மானியமும் பெற வாய்ப்புள்ளது.

இவை தவிர, தொழிற்சாலை அமைக்க நிலம் வாங்கும்போது பத்திரப் பதிவுக் கட்டண மானியம், வேலைவாய்ப்புப் பெருக்க மானியம், சுற்றுப்புறச் சூழலுக்கு உகந்த தொழில்களுக்கான மானியம், சிறப்பு தொழில் நிறுவனங்கள், சிறப்பு இன தொழில்முனைவோருக்கான மானியம் போன்ற மானியங்களும் பெறலாம்.

பாளையங்கோட்டையில் உள்ள மாவட்ட தொழில் மையப் பொது மேலாளர் அலுவலகத்தில் 12ஆம் தேதி முற்பகல் 11 முதல் மாலைவரை முகாம் நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ள இளைஞர்கள், தொழில் முனைவோர் பங்கேற்கலாம் என்றார் அவர்.

No comments:

Post a Comment