26.11.2015, தேனி:
தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில், செவித்திறன் குறைந்தவர்களுக்கான ஆரம்ப நிலை பரிசோதனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ரூ.19.80 லட்சம் மதிப்பிலான கருவிகளுடன், ஒலி உட்புகாத அறையையும் உடைய இம் மையத்தின் மூலம் 5 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஆரம்ப நிலையிலேயே செவித்திறன் குறைபாட்டை கண்டறியலாம்.
மேலும் இங்கு காதுமூக்கு தொண்டை பரிசோதனை, தூய ஒலி செவிமானியுடன் பார்த்தல், மூளை தண்டுவடம் மறுபதில் செவி பரிசோதனை, செவி ஒலி வெளிகொணர் பரிசோதனை, பேச்சு மற்றும் மொழித்திறன் வளர்ச்சி பரிசோதனை, செவித்திறன் கருவி பொருத்துதல், ஆரம்ப நிலை பயிற்சிகள், பேச்சு பயிற்சி என 8 வகை பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. இதில் விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment