![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjKYRghQYunFWEr4eoXlgo3vNTg6IHrOpQnDAqiivlqLEGi-KNZE-ZAGMfojOiUOTAYg2wQFf0d2mbo5WZsa1o1z58cpDbf9p5q5q5HUTHLpslIGnGgh4pVtK0vrcxBUmOvBGcTk00C1fk/s1600/Fasting.jpg)
நாமக்கல், 03 November 2015
இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் நவம்பர் 13-ஆம் தேதி மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட மாற்றுத் திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் எ,பழனிவேல் கூறியது:
![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjyNzuZCz43KQzZlOwwIpPunYdheIWiIG7rbVYrVGx0aUhDU1I7mKRvUUO8391v_voJG0gZXM8Cm3egJ9CRg8Tg3KMNEPzewP1fXe9FQzZy8VuYUm7xpWESdHJ0liLwDpkunDIDFGWJM4w/s1600/%25E0%25AE%25A8%25E0%25AE%25BE%25E0%25AE%25AE%25E0%25AE%2595%25E0%25AF%258D%25E0%25AE%2595%25E0%25AE%25B2%25E0%25AF%258D.jpg)
குமாரபாளையம் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு குடியிருக்க சொந்த வீடு இல்லை. இவர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் கடந்த செப்டம்பர் மாதம் மனு அளிக்கப்பட்டது. இம் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க வருவாய்த் துறையினருக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இருப்பினும், அங்கு புறம்போக்கு நிலம் இல்லை என வருவாய் ஆய்வாளர் பதில் தெரிவித்துள்ளார். மாற்றுத் திறனாளிகள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து குமாரபாளையம் பேருந்து நிலையத்தில் வரும் 13-ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்றார்.
No comments:
Post a Comment