09.11.2015, திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டத்தில், இதுவரை, 20,482 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 25.24 கோடி ரூபாய் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது என, கலெக்டர் ஞானசேகரன் கூறினார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மன வளர்ச்சி குன்றியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையிலும், மாற்றுத்திறனாளிகளை மனித சமுதாயத்தின் ஓர் அங்கமாக அனைவரும் அங்கீகரிக்கும் வகையிலும், நாட்டின் வளர்ச்சியில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில், பல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. மாற்றுத்தினாளிகள் சம வாய்ப்புகள் பெற்று, வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்று திறனாளிகளுக்கான மாத உதவி தொகை, ஆயிரம் ரூபாயிலிருந்து, 1,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 சதவீத வீடுகள் ஒதுக்கப்படுகிறது. இரண்டு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கப்படுகிறது. இதுவரை, 20,482 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, 25.24 கோடி ரூபாய் பராமரிப்பு உதவி தொகை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment