மதுரை, 07 November 2015
மாற்றுத் திறனாளி ஒதுக்கீட்டில் நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் உண்மை நிலையைக் கண்டறிய மருத்துவப் பரிசோதனைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சி.சண்முகம் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை நவ.17 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
அவரது மனு விவரம்:
திருநெல்வேலி மாவட்டத்தில் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து பலர், மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்த நிலை உள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு செய்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் அரசு வேலைக்காகக் காத்திருக்கும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது.
அனைத்து மாவட்டங்களிலும் உள்ள மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கும் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். இந்த மருத்துவ பரிசோதனையின் அடிப்படையில் தகுதியற்றவர்களைப் பணியில் இருந்து நீக்கி, தகுதியான மாற்றுத்திறனாளிகளை பணியில் அமர்த்த நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் என மனுவில் பொதுவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனுதாரரின் கோரிக்கையில் தெளிவு இல்லை. எனவே தெளிவான கோரிக்கையைக் குறிப்பிட்டு மனுதாரர் நிவாரணம் கோரலாம் எனக்கூறி மனு மீதான விசாரணையை நவம்பர் 17 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

No comments:
Post a Comment