FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Thursday, November 5, 2015

எம்.ஜி.ஆர்., காதுகேளாதோர் பள்ளியில் நான்கு மாணவர்களுக்கு மர்ம காய்ச்சல்

05.11.2015, சென்னை : 
எம்.ஜி.ஆர்., நினைவு இல்ல, காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் நான்கு பேர், மர்மக் காய்ச்சலால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

மணப்பாக்கம், எம்.ஜி.ஆர்., நினைவு இல்லத்தில், காதுகேளாத மற்றும் வாய்பேசாதோர்க்கான மேல்நிலைப் பள்ளி உள்ளது. அதில், மாணவ, மாணவியர் மற்றும் ஊழியர்கள் என, 140 பேர் உள்ளனர்.நேற்று முன்தினம், அங்கு உள்ள நான்கு மாணவ, மாணவியர் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். உடனே, போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்தனர்.தகவலையடுத்து, மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரிகள், அந்த பள்ளியை ஆய்வு செய்தனர்.சுகாதார பாதிப்பு பகுதிகளை, மாநகராட்சி ஊழியர்கள் சுத்தம் செய்து, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது: காய்ச்சல் பாதிக்கப்பட்ட நாளில், மாணவர்களுக்கு பிரியாணி வழங்கி உள்ளனர். மழை நேரத்தில், சிலருக்கு பிரியாணியால் ஒவ்வாமை ஏற்படும். சாதாரண காய்ச்சல் தான். சுகாதார தடுப்பு நடவடிக்கை குறித்து, பள்ளி நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கி உள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

4 பேருக்கு டெங்கு அறிகுறி

திருத்தணி அரசு மருத்துவமனையில், கலெக்டர் வீரராகவ ராவ் மற்றும் மாவட்ட சுகாதார துறை இணை இயக்குனர் மோகனன் ஆகியோர், நேற்று இரவு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது கலெக்டர் கூறியதாவது:மாவட்டத்தில், சிலருக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறி தெரிய வந்துள்ளது. திருத்தணி அரசு மருத்துவமனையில், இன்று (நேற்று) 56 பேருக்கு, ரத்தப் பரிசோதனை செய்ததில், நான்கு பேருக்கு டெங்கு அறிகுறி இருந்தது தெரியவந்துள்ளது.டெங்குவை எளிதில் குணப்படுத்திவிடலாம்; யாரும் பீதி அடைய வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்திக்கு, அனைவரும் நிலவேம்பு கஷாயம் குடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment