புது தில்லி,, 27 November 2015
ரயிலில் மாற்றுத் திறனாளிகளுக்கு ஏற்றவாறு படுக்கை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ரயில்வே துறை சார்பில் புதிய சலுகை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ரயில்வே அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ரயில்களில் பயணம் செய்யும் மாற்றுத்திறனாளிகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்படுகின்றனர். ஒரு பிரிவினருக்கு, பயணத்தின்போது உதவிக்கு ஒரு நபர் கட்டாயம் இருக்க வேண்டும். மற்றொரு பிரிவினர், விரும்பினால் உதவிக்கு ஒரு நபரை அழைத்து வரலாம். இரண்டு வகையிலான மாற்றுத் திறனாளிகளுக்கும், அவர்களின் உதவிக்காக வரும் நபருக்கும் இனி ஒரே பெட்டியில் முறையே கீழ் படுக்கையும், நடுப் படுக்கையும் வழங்கப்படும். மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான ஒதுக்கீட்டின்கீழ் ரயிலில் இடம் இல்லையென்றாலும், அவர்களுக்கு பொதுப் பிரிவு பெட்டிகளில் இந்த வசதி செய்து தரப்படும். இந்தப் புதிய விதிமுறை வரும் டிசம்பர் 22-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment