மதுரை, 01 November 2015
புதுவாழ்வுத் திட்டத்தில் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.12.58 கோடி கடனுதவி அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
தமிழக அரசின் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் புதுவாழ்வுத் திட்டம் 2006ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில் இதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தலைமையில் வியாழக்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.
இதில் ஆட்சியர் பேசியது: மதுரை மாவட்டத்தில் 4 ஒன்றியங்களில் 132 கிராம வறுமை ஒழிப்புச் சங்கங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 2,195 மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளன. இக்குழுக்களுக்கு உள்கடன் ஆதார நிதியாக ரூ.1.25 கோடி வழங்கப்பட்டது. வங்கிக் கடனாக ரூ.11.33 கோடி பெறப்பட்டுள்ளது என்றார்.
இக்கூட்டத்தில் சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா, தமிழ்நாடு மாநில வாழ்வாதார இயக்கத் திட்ட அலுவலர் ரேவதி, முன்னோடி வங்கி மேலாளர் முருகபிரபு, புதுவாழ்வு திட்ட மேலாளர் சுபாஷ் பாபுநாத் மங்களம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

No comments:
Post a Comment