FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Monday, November 23, 2015

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீடு: போலி ஆவணங்கள் மூலம் 10 பேர் பணி நியமனம்: உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்

மதுரை , 21 November 2015
திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் சேர்ந்தவர்களில் 10 பேர் போலி ஆவணங்கள் சமர்ப்பித்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார்.

திருநெல்வேலி மாவட்டம் நாரணம்பாள்புரத்தைச் சேர்ந்த சண்முகம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில்,

மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் பலர் அரசுப் பணியில் சேர்ந்துள்ளனர். இதனால் உண்மையான மாற்றுத்திறனாளிகளுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் போலியான ஆவணங்களை சமர்பித்து பலர் வேலைக்குச் சேர்ந்துள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் அடங்கிய அமர்வு முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் செல்வராஜ், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் 105 பேர் மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டில் அரசுப் பணியில் உள்ளனர். போலி ஆவணங்களைச் சமர்பித்து மருத்துவ அலுவலரிடம் ஒப்புதல் பெற முயன்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேற்கூறிய 105 பேரில் 71 பேர் போலி ஆவணங்கள் மூலம் பணிக்குச் சேர்ந்தவர்கள் என்ற சந்தேகம் உள்ளது. இதில் 10 பேர் போலி ஆவணங்களை சமர்ப்பித்தவர்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்தார்.

அரசுத் தரப்பு வழக்குரைஞரின் பதிலை பதிவு செய்த நீதிபதிகள்,

இதுதொடர்பாக தமிழக அரசின் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முதன்மைச் செயலர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர், திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திருநெல்வேலி மாவட்ட சிபிசிஐடி டிஎஸ்பி உள்ளிட்டோர் 3 வாரத்திற்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment