FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Friday, November 27, 2015

இணையதளத்தில் முன்பதிவு: ரயில் பயணச் சீட்டு பெற முடியாமல் தவிக்கும் மாற்றுத்திறனாளிகள்

சென்னை, 27 November 2015

முன் பதிவு செய்வதற்காக வழங்கப்பட்ட பிரத்யேக அடையாள அட்டையைப் பயன்படுத்தி, ரயில் நிலைய கவுன்ட்டர்களில் மட்டுமே பயணச் சீட்டை பெற முடிகிறது, இணையதளத்தில் முன்பதிவு செய்ய முடியவில்லை என்று மாற்றுத் திறனாளிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
மாற்றுத் திறனாளிகளால் ரயில் நிலையங்களுக்குச் சென்று பயணச் சீட்டு பெறுவது சிரமம் என்பதற்காகவே இணையத்தில் சலுகை விலையில் பயணச் சீட்டு பெறும் முறையை ரயில்வே துறை கொண்டுவந்தது. அதற்காக, பிரத்யேகமான அடையாள அட்டையை ஏப்ரலில் வழங்கியது. பல மாதங்கள் ஆகியும், இந்தத் திட்டம் இன்னும் நடைமுறைக்கு வரமால் உள்ளது.
எப்படி, யாரிடம் பெறுவது?
இதன்படி, மாற்றுத் திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயிலில் பயணம் செய்ய புகைப்படத்துடன் கூடிய தனி அடையாள அட்டை வழங்கப்படும். இதற்கு மருத்துவச் சான்றிதழ், புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் அடையாள அட்டை, வயது வரம்பு சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 2 புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களுடன் அந்தந்த ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக வணிகப் பிரிவை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டது.
இல்லையெனில், அலுவலக முகவரிக்கு சான்றிதழ்களின் நகல்களை தபாலில் அனுப்பலாம் எனவும் கூறப்பட்டது. சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்பு, விண்ணப்பித்தோருக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இதை வேறொரு பயணிக்காகப் பயன்படுத்தக்கூடாது. ஒவ்வொரு ரயில் பயணத்தின் போதும் அசல் அடையாள அட்டையையே பயன்படுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது.
அட்டை இருந்தும் பயனில்லை?
இருப்பினும், அடையாள அட்டை இருந்தும் பயனின்றி இல்லாமல் இருக்கிறது என்கின்றனர் மாற்றுத்திறனாளிகள்.
இதுகுறித்து மாற்றுத்திறனாளி சதீஷ் குமார் கூறியது:
ரயிலில் பயணம் செய்வதற்காக ஐஆர்சிடிசி இணையதளத்துக்கு சென்று பயணச் சீட்டு சலுகை விலையில் எடுக்க முன்பதிவு செய்ய முயற்சித்தேன், ஆனால் முடியவில்லை. இதையடுத்து, கவுன்ட்டரில் பயணச் சீட்டை முன்பதிவு செய்தேன்.
பல மாதங்களாக இந்த நிலை நீடிப்பது தொடர்பாக, ரயில்வே வணிகப் பிரிவில் முறையிட்டேன். அவர்கள் கூறியபடி, ஐஆர்சிடிசி அதிகாரிகளிடமும் முறையிட்டேன். பல யோசனைகள் சொன்னார்கள். அதனடிப்படையிலும் முன்பதிவு செய்ய முயற்சித்தேன், முடியவில்லை.
நேரில் தான் சென்று பயணச் சீட்டு பெற வேண்டுமென்றால் இந்த அடையாள அட்டை எதற்கு? இதற்கு தீர்வுதான் என்ன? என்றார் சதீஷ் குமார்.
இது குறித்து ரயில்வே வட்டாரத்தில் விசாரித்ததில், மாற்றுத் திறனாளிகளின் விவரங்கள் கணினியில் சேர்க்கப்பட்டுவிட்டன. எனினும், தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருந்தால், அவை உடனடியாக சரி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment