20.11.2015, சேலம்:
''சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகையை, 3,000 கோடி ரூபாயாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது,'' என, தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிகளின் தலைவர் இளங்கோவன் தெரிவித்தார்.
அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சேலம், நேரு கலையரங்கில், 62வது அனைத்திந்திய மாநில அளவிலான கூட்டுறவு வார விழா நாளை(இன்று) நடக்கிறது. மாநில அளவிலான விழா, முதன்முறையாக சேலத்தில் நடப்பது குறிப்பிடத்தக்கது. விழாவில், மாற்றுத்திறனாளிகள் கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், சிறு வணிக கடன், பால்பண்ணை கடன், ஆடு, கோழி பண்ணை, பட்டுப்பூச்சி வளர்ப்பு கடன், விவசாய கருவிகள் கடன் என, 1,419 பயனாளிகளுக்கு, 5.6 கோடி ரூபாய் கடன் வழங்கப்படுகிறது. கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் இடைப்பாடி பழனிசாமி மற்றும் அதிகாரிகள் பங்கேற்கின்றனர். சேலம், நாமக்கல் மாவட்டத்தில், மத்திய கூட்டுறவு வங்கியின் கட்டுப்பாட்டில், 60 கிளைகள் செயல்படுகின்றன. தற்போதைய நிலையில், மத்திய கூட்டுறவு வங்கியின் வைப்புத்தொகை, 2,956 கோடி ரூபாய். கடந்த ஆண்டை காட்டிலும், 120 கோடி ரூபாய் வைப்புத்தொகை அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில், 3,000 கோடி ரூபாய் இலக்கு நிர்ணயம் செய்துள்ளோம். அதை எட்டிப் பிடிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு, 150 கோடி ரூபாய் கடன் உதவி வழங்கியதற்காக, சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு, தமிழக அரசு விருது வழங்கி கவுரவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:
Post a Comment