அரியலூர், 05 November 2015
அரியலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட விளையாட்டு அரங்கில் புதன்கிழமை நடைபெற்றன.
போட்டியை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். குமார் தொடங்கிவைத்தார். போட்டிகள் 4 பிரிவுகளில் தனித்தனியாக நடத்தப்பட்டது.
கை, கால் ஊனமுற்றோருக்கு 100, 50 மீ. ஓட்டம், குண்டு எறிதல், சக்கர நாற்காலி, இறகு பந்து மற்றும் மேசை பந்து ஆகிய போட்டிகளும், பார்வையற்றோருக்கு 50, 100 மீ. ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல், கையுந்து பந்து போட்டிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50, 100 மீ. ஓட்டம், பந்து எறிதல், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் மற்றும் எறிபந்து போன்ற விளையாட்டும், காது கேளாதோருக்கு 100, 200, 400 மீ. ஓட்டம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், கபடி போட்டிகளும் நடைபெற்றன.
போட்டிகளில் அரியலூர், திருமானூர், தா.பழூர், ஜெயங்கொண்டம், செந்துறை ஆகிய ஒன்றியங்களில் இருந்து 169 மாணவ, மாணவிகள் வயதுவரம்பின்றி பங்கேற்றனர். மாலையில் நடைபெற்ற விழாவில் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
கையுந்து பந்து பயிற்றுநர் ஆர். பொற்கொடி, பளுதூக்கும் பயிற்றுநர் ஆர். சதீஷ், கைப்பந்து பயிற்றுநர் எஸ். சிவரஞ்சன், அன்பகம் சிறப்பு பள்ளி ஆசிரியைகள் எம். ஜெரோம் எமிலியானா பவுலின், எஸ். ரஞ்சிதா, எம். எலிசபெத் ராணி, ஏ. ஆரோக்கியமேரி, திருசக்திவேலன், கபிலன் ஆகியோர் போட்டிகளுக்கான ஏற்பாடுளை செய்திருந்தனர்.

No comments:
Post a Comment