FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Monday, February 29, 2016

திருவண்ணாமலையில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகள் நாளை நடக்கிறது

திருவண்ணாமலை, பிப்.29-
மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோருக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) திருவண்ணாமலையில உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடக்கிறது.

இதில் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், விளையாட்டு ஆர்வலர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். மாவட்ட அளவில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறுவோருக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். குழு போட்டி மற்றும் தனித்திறன் போட்டியில் முதலிடத்தில் வெற்றி பெற்றோர் பங்கேற்கும் மாநில அளவிலான போட்டிகள் சிவகங்கை மாவட்டத்தில் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடக்கிறது.

திருவண்ணாமலையில் நாளை நடக்கும் போட்டியில் குழு போட்டிகளும், தனித்திறன் போட்டிகளாக கால் ஊனமுற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கை ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும், குள்ளமானவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், கால் ஊனமுற்றவர்களுக்கு குண்டு எறிதல் போட்டியும், இரு கால்களும் ஊனமுற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டமும் நடத்தப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கான பிரிவில் முற்றிலும் பார்வையற்றவர்களுக்கு 50 மீட்டர் ஓட்டமும், மிகக்குறைவான பார்வையற்றவர்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் குண்டு எறிதல், சாப்ட் பால் போட்டியும் நடத்தப்படுகிறது.

மன நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மீட்டர், 100 மீட்டர் ஓட்டம், நின்ற நிலையில் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர் ஓட்டமும், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டியும் நடத்தப்படுகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க வயது வரம்பு ஏதுமில்லை. பள்ளி மற்றும் கல்லூரிகளை சேர்ந்த விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம், குழு போட்டியில் ஏதாவது ஒன்றிலும், தனித்திறன் போட்டியில் ஒன்றிலும் கலந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகவலை கலெக்டர் ஞானசேகரன் தெரிவித்துள்ளார்.

உடல் ஊனம் 'கடவுளின் வரம்' அல்ல: 'திவ்யங்' சொல்லுக்கு மாற்றுத்திறனாளிகள் எதிர்ப்பு

உடல் ஊனம் என்பது 'கடவுளின் வரம்' அல்ல. மாற்றுத்திறனாளிகளை 'திவ்யங்' என அழைப்பதால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ எவ்விதத்திலும் மாறப்போவதில்லை என உடல் சவால் கொண்டவர்கள் நலனுக்கான தேசிய அளவிளான அமைப்பின் தலைவர் ஜான்சி ராணி தெரிவித்துள்ளார்.

மாற்றுத்திறனாளிகளை ரயில்வே பட்ஜெட்டில் 'திவ்யங்' என்ற புதிய வார்த்தையைக் கொண்டு குறிப்பிட்டிருப்பது கடும் அதிருப்தி அலையை ஏற்படுத்தியிருக்கிறது.

2016-2017-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட் வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுத்திறனாளிகளின் நிலையை குறிப்பிடும் வகையில் 'திவ்யங்' என்ற வார்த்தை பட்ஜெட்டில் குறிப்பிடப்படுள்ளது.

திவ்யங் என்ற வார்த்தை பயன்பாட்டுக்கு மாற்றுத்திறனாளிகள் நல அமைப்புகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்த பட்ஜெட்டில் தங்களுக்கு என்று சிறப்பாக எவ்வித சலுகைகளையும் அரசு அறிவிக்கவில்லை என மாற்றுத்திறனாளிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர். திவ்யங் என்ற புதிய வார்த்தை மூலம் தங்களை அழைத்திருப்பது அதிருப்தி அளித்திருப்பதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

உடல் ஊனம் என்பது 'கடவுளின் வரம்' அல்ல. மாற்றுத்திறனாளிகளை 'திவ்யங்' என அழைப்பதால் அவர்கள் சமூகத்தில் ஒடுக்கப்படுவதோ, ஒதுக்கப்படுவதோ எவ்விதத்திலும் மாறப்போவதில்லை என உடல் சவால் கொண்டவர்கள் நலனுக்கான தேசிய அளவிளான அமைப்பின் தலைவர் ஜான்சி ராணி தெரிவித்துள்ளார்.

உடல் ஊனம் விதிப்பயன் என்பது போல் ஒரு வார்த்தையை அரசு உருவாக்கியதற்கு ஒருபுறம் அதிருப்தி வெளியாகிவரும் நிலையில் திவ்யங் என்று பொதுப்படையாக கூறினால் அதில் எத்தகைய ஊனம் எல்லாம் கணக்கில் கொள்ளப்படும் என மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு அமைப்புகளும் கேள்வி எழுப்பியுள்ளன.

அதுமட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கான கட்டண வீல்சேர் சேவை ரயில்வே அமைச்சர் அறிவித்துள்ளதும் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சாரதி / ரயில் மித்ரா என இந்த சேவைக்கு பெயரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூகநீதிக்கான ஈகுவல்ஸ் என்ற அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் அம்பா சலேகர் கூறும்போது, "மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு சேவைகளும் கட்டண சேவைகளாக இருப்பது வேதனையளிக்கிறது. தமிழகத்தில் பேட்டரி மூலம் இயங்கும் வீல்சேர்கள் ரயில்நிலையங்களில் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனால், கொங்கன் ரயில்வே மண்டலத்தில் அதற்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பாகுபாடுக்கு காரணம் என்ன?" என்றார்.

மாற்றுத்திறனாளிகளின் ரயில் பயணத்தை சுமுகமானதாக்குவதற்கான கோரிக்கைகளை அரசு எவ்விதத்திலும் பூர்த்தி செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

Saturday, February 27, 2016

J&K Judo Team of the Deaf that won 7 medals including 3 gold, 2 silver and 2 bronze

JAMMU, Feb 25: J&K Judo Team of the Deaf that won 7 medals including 3 gold, 2 silver and 2 bronze and claimed the overall trophy in 4th Judo Nationals for Deaf at Lucknow, was felicitated in an impressive function at J&K Samaj Kalyan KJendra, here today.
The National Championship was organized by All India Sports Council of the Deaf.
The State team participated in the event under the banner of J&K Blind and Para Judo Association.
The felicitation function was held by J&K Samaj Kalyan Kendra and J&K Para Judo Association.
IGP Jammu, Danesh Rana was the chief guest on the occasion, while Ex ADGP SS Wazir, Ex DG Information, KB Jandial, EX IGP, PK Gupta, SSP Jammu Uttam Chand and Ranjeet Kalra, president J&K Blind and Para Judo Association and vice chairman Sports Council, Jammu, besides Vikas Gupta, vice president J&K Blind and Para Judo Association and Joint Secretary Judo Federation of India, Suraj Bhan Singh Judo Coach, Rameshwar Singh Judo Coach, Manish Chatwal Referee and Roshan Bhan, Principal Deaf School.
IGP in his address appreciated the efforts of coach and Judokas for their best performance in the Nationals. He also inaugtarted Computer Lab donated by J&K Police Department under Social Responsible Programme to J&K Samaj Kalyan Kendra.
The medal winners were Sunil Kumar, Chetan and Vivek Singh (all gold); Rehan Kumar and Raj Kumar (silver) and Shubam Kumar and Nabeel Ai Dar (bronze).
The team was accompany by Coach Rameshwar Singh and Manish Chatwal, Referee cum Manager.

Thursday, February 25, 2016

Starbucks barista learns sign language to talk to deaf customer


Ibby Piracha, 23, buys coffee from his neighborhood Starbucks in Leesburg, Virginia, two or three times a week. Each time Piracha, who is deaf, steps to the counter and types his order into his phone for the barista to see.

But on Friday, the barista used sign language to ask him what he wanted. She then handed him a note that said, "I've been learning [American Sign Language] just so you can have the same experience as everyone else."

Piracha was shocked. He had no idea the barista he saw multiple times a week was learning sign language.

"I was like 'wow.' It brought a smile to my face," Piracha said. "I was really surprised she had started signing. It wasn't anything I had asked her to do. She had taken her own initiative and she had done it herself."

He then posted about the experience on his Facebook page and asked his friends to share it so people can learn about the "hearing community supporting the deaf community." More than 2,500 people have shared it since Friday, which Fox5 first noted.

Employees at the Starbucks on the 1000 block of Edwards Ferry Road NE said Monday that they could not speak to the media. A spokesperson from Starbucks' corporate office said the company is proud the employee is "taking this initiative to learn American Sign Language."

Piracha, who spends most of his time in Leesburg, said he has never before encountered a service employee who has communicated with him in sign language.

"I was glad to hear someone supporting the deaf community," he said. "Sometimes we feel kind of pushed away, and I wish hearing people were a little more assertive to learn more about us and our community."


நீதிமன்றத்தில் ஆஜராகாத அரசு பெண் மருத்துவருக்குப் பிடியாணை

ஈரோடு, 25 February 2016,
ஈரோடு நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்க நேரில் ஆஜராகாத அரசுப் பெண் மருத்துவருக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே சென்னம்பட்டி ஜரத்தல் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீரங்கன் (50), விவசாயத் தொழிலாளி. இதே பகுதியைச் சேர்ந்தவர் முத்து. இவரது மகள் பூவாயி (30). பூவாயி காது கேட்காத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளி. அவருக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

இந்நிலையில், பூவாயைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, அவரிடம் ஸ்ரீரங்கன் நெருங்கிப் பழகினாராம். அதன் பின்னர், ஸ்ரீரங்கன் திருமணம் செய்து கொள்ள மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து பூவாயி கொடுத்த புகாரின் பேரில் வெள்ளித்திருப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஸ்ரீரங்கனைக் கைது செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை ஈரோடு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் பூவாயியிக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்ட ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை மருத்துவர் வைஷ்ணவியை சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு நீதிபதி திருநாவுக்கரசு 5 முறை உத்தரவிட்டிருந்தார். ஆனால், 5 முறையும் அவர் ஆஜராகவில்லை. இந்நிலையில், புதன்கிழமை நடந்த விசாரணைக்கு சாட்சியம் அளிக்க ஆஜராகுமாறு வைஷ்ணவிக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனாலும், அவர் ஆஜராகவில்லை.

அதையடுத்து, சாட்சியம் அளிக்கத் தவறிய மருத்துவர் வைஷ்ணவிக்குப் பிடியாணை பிறப்பித்து நீதிபதி திருநாவுக்கரசு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணை மீண்டும் மார்ச் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி

25.02.2016
வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு கட்டி வரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் ரங்கசாமி கூறியுள்ளார்.

கடனுதவி

புதுச்சேரி மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்கழகம், மாற்றுத்திறனாளிகளுக்கு பலவிதமான கடனுதவிகளை அளித்து அவர்களுடைய சமூக பொருளாதார அந்தஸ்தை மேம்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறது. இந்த கடனுதவி தேசிய ஊனமுற்றோர் நிதி வளர்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் இருந்து பெற்று வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் புதுச்சேரி பகுதியை சேர்ந்த 266 பேருக்கு மளிகை கடை, துணி வியாபாரம், பெட்டி கடை, கணினி மையம், பொது வியாபாரம் மற்றும் பலதரப்பட்ட தொழில்கள் செய்வதற்காக ரூ.2 கோடியே 41 லட்சம் கடனுதவியாக வழங்கப்பட்டது.

இந்த கடனுதவி வழங்கும் விழா முருங்கப்பாக்கம் மல்லிகா திருமண நிலையத்தில் நடைபெற்றது. விழாவிற்கு அமைச்சர் ராஜவேலு தலைமை தாங்கினார். மகளிர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக் கழக தலைவர் பாண்டியன் வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

இடஒதுக்கீடு வழங்கப்படும்

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் திட்டங்களை இந்த கழகத்தின் மூலம் மேற்கொண்டு வருகின்றோம். மாற்றுத்திறனாளிகளுக்கு உயர்த்தப்பட்ட உதவித்தொகை குறித்த நேரத்தில் வழங்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெரிய குறையாக உள்ளது. இதை தீர்க்க வேண்டும் என்பது அரசின் எண்ணம். இட ஒதுக்கீட்டை அந்த அளவுக்கு வழங்க முடியுமோ அதை வழங்குமாறு தலைமை செயலருக்கு கூறியுள்ளோம். அவரும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அரசுப்பணி மட்டுமின்றி சிறிய தொழில் செய்யவும் கடனுதவி அளித்து ஊக்குவித்து வருகின்றோம். 50 சதவீதத்திற்குள் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகள் தொழில் தொடங்க முடியும். அவர்கள் கடனுதவி பெற்று தொழில் தொடங்கி வளர்ச்சி பெற வேண்டும். இந்த அரசு திட்டங்களை செம்மையாக செயல்படுத்தி வருகின்றது. மாற்றுத்திறனாளிகள் அரசால் கட்டப்பட்டுவரும் குடியிருப்புகளில் இட ஒதுக்கீடு வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று அரசு கட்டிவரும் குடியிருப்புகளில் வீடற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

இவ்வாறு ரங்கசாமி பேசினார்.

விழாவில் சபாநாயகர் சபாபதி, அமைச்சர்கள் பன்னீர்செல்வம், தியாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்ட மாற்றுத்திறனாளிகள் இலவச பஸ் பாஸ் ரத்து செய்ததால் ஆத்திரம்

25.02.2016, புனே,
இலவச பஸ் பாஸ் ரத்து செய்த ஆத்திரத்தில், புனே மாநகராட்சி கமிஷனர் காரை முற்றுகையிட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இலவச பஸ் பாஸ்

புனே மாநகராட்சி சார்பில் மாநகராட்சிக்குட்ட பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் பஸ்களில் இலவசமாக பயணம் செய்ய பஸ் பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இதை திடீரென மாநகராட்சி நிர்வாகம் ரத்து செய்துள்ளது. இதை கண்டித்து மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் கடந்த 2 நாட்களாக உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் இதை மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.

கமிஷனர் கார் முற்றுகை

இதனால் ஆத்திரம் அடைந்த மாற்றுத்திறனாளிகள் நேற்று காலை மாநகராட்சி அலுவலக வளாகத்திற்குள் வந்து கொண்டிருந்த கமிஷனர் குணால் குமாரின் காரை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு உண்டானது. அப்போது காரில் இருந்து இறங்கிய கமிஷனர் குணால் குமார் அவர்களை சமாதானம் செய்தார்.

மேலும் இந்த விஷயத்தில் விரைவில் நல்ல முடிவு எடுப்பதாக அவர்களிடம் உறுதி அளித்தார். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Wednesday, February 24, 2016

Cochlear implants and specialist auditory verbal therapy programme transforms deaf children’s lives

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணைக்கு கூட்டியக்கம் வரவேற்பு

40 சதவீத ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமது மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 20.02.2016 அன்று தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அதில் முக்கிய கோரிக்கையான 40 சதவீத ஊனமிருந்தால், உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஆதரவற்றோராக இருந்தால்தான் உதவித்தொகை தரப்படும் என்ற விதியையும் ரத்து செய்வதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.

இதனையடுத்து சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணி இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயர் மாற்றம்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதை மாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்று இனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணைக்கு கூட்டியக்கம் வரவேற்பு
இந்த புதிய அரசாணை வெளியானதை அடுத்து, எமது கூட்டியக்கத்தின் தலைவர்கள் எஸ். நம்புராஜன், டி.எம்.என்.தீபக், பி. முனோகரன் ஆகியோர் தலைமை செயலகத்தில் சமூக நலத்துறை செயலாளர் திரு.பி.சிவசங்கரன் அவர்களை சந்தித்தனர். அப்போது இந்த அரசாணை மூலம் 10 லட்சத்திற்கும் மேலான மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள் என திரு.சிவசங்கரன் தெரிவித்தார்.

இந்த புதிய அரசாணையை எமது கூட்டியக்கம் சார்பில் வரவேற்கிறோம்.

பா. ஜான்சிராணி,தலைவர்-TARATDAC 9444405645
 டி.எம்.என். தீபக், தலைவர்,டிச-3 இயக்கம்  9840646953 
 பி. மனோகரன்,   திட்ட இயக்குநர்-NFB தலைவர் 9994895983
 இ.கே. ஜமால் அலி, தலைவர், TNSFD  9710540984

,

Tuesday, February 23, 2016

Disabled children perform at ‘Ek Taal Ek Saal’

23.02.2016, Bhopal : Arushi in association with Indira Gandhi Rashtriya Manav Sangrahalaya organized its Annual Day, Ek Taal Ek Saal on February 21, 2016. Chief Secretary of Govt. of Madhya Pradesh, Antony J C Desa was present as the chief guest to cheer the children. Commissioner Dept, of Social Justice, Govt. of M.P., Manohar Agnani was also present as Special Guest for the function. On this occasion DS Rao (Head of Office, IGRMS) was present. This cultural evening was presented by children with disabilities from Arushi.

The program started by message by Gulzar Sahab followed by lightening of the lamp and Arushi Anthem written by him. Antony Desa was very excited and overwhelmed to see such nice performances by the disabled children. He said that after seeing such program the myth that if there is any physical disability in a person it is a barrier for them has turned wrong. The performances included Kaafi Raag by Sargam Kushwaha, Madhuban mein Radhika Naache Re by Vivek and Rajasthani Folk songs by Falguni Purohit.

Ankit on Tabla and Dholak and Khushi Gupta was on keyboard and Harmonium to assist the children. Dance by Shubham Tiwari was a hit as he performed on Mera Chain Wain sab Ujda and Salaame Isk Meri Jaan caught everyone’s attraction and on the other hand audience was surprised when Kumkum Shakya and Rita Sen both hearing impaired girls were found performing on beautifully choreograophed, Navras by Kanupriya Gupta.

Children also presented Cartoon Characters and Healthy food verses Junk Food in fancy dress. There was a fashion show on the theme States of India. In the end a Nukkad Natak on awareness on disability was also presented by teachers and volunteers of Arushi. Most cooperative parents were given token of appreciation by giving them Most Supportive Parent Award.

The program was hosted by Kanupriya Gupta. Parents, volunteers and staff of Arushi and IGRMS were present to cheer the efforts of the children. This type of program is very important to indulge independency, capacity building and inclusion among children with disabilities.

Dubai’s Mawaheb from Beautiful People expands to include a coffee corner and arts shop

23.02.2016,
Ashar Hussain is a dancer, graphic designer, photographer and recently became a waiter.

The 19-year-old Pakistani student, who is deaf, is being taught how to communicate with coffee shop patrons.

“I tell them to speak slow or write their order down,” says Hussain, who reads lips.

His addition marks the latest triumph and development of Mawaheb from Beautiful People, a non-profit art studio for adults with special needs. Located in Dubai’s historical Al Fahidi district, the studio began in a villa provided by Princess Haya, wife of Sheikh Mohammed bin Rashid, Vice President and Ruler of Dubai, in 2010.

They recently expanded to a new studio that is three times bigger to open an art shop and coffee corner, where the students are assigned jobs. There are also art therapy sessions, exhibitions and sales of artworks created by the students.

The organisation is run by Wemmy de Maaker, a 44-year-old Dutch social worker, who says the coffee corner is a way to create further opportunities for social interactions for those uncomfortable around people with disabilities.

“A lot of people haven’t met deaf people and don’t know how to treat people with disabilities,” she says.

The reverse can also be true. De Maaker recalls that Hussain initially was not keen on his role in the coffee shop.

“He was in his own circle of friends who can communicate with him,” says de Maaker. “We asked him to step out of his comfort zone, so that he would become confident and learn new skills.”

Hussain credits the coffee corner experience as one of the reasons for a newfound confidence gained from his time with Mawaheb from Beautiful People.

“My parents allow me to take the metro and come here by myself now,” he says. “I dream of going to university to become a professional photographer.”

Tough love

Ryam Omar is chatty. One afternoon this week, the 36-year-old Yemeni saleswoman eagerly approached customers in the art shop. She pulled out a few greeting cards splashed with violet brush strokes, and informed them that her friends had created them. However, she struggled to make eye contact.

“You need to look up, look them in the eyes,” said de Maaker, who took her aside for a chat once the visitors left. “You also have to keep your distance when talking to them. No hugging.”

After being mostly confined to her home since birth because of a developmental delay, Omar’s parents enrolled her at Mawaheb. The studio has 14 students, between the ages of 18 and 58, who attend a full day of art-related activities three to five times a week.

While art is a way for the students to express themselves, the 25 volunteers have an equally rewarding experience, as they watch them become independent adults.

“Ryam had no purpose in life, no reason to wake up or dress,” says de Maaker, who moved to Dubai from the Netherlands more than a decade ago. “Then she started here and now is a chatterbox, wakes up early, dresses up and ‘owns’ the shop. She is almost like the manager of the shop. She calls it her shop.”

The students’ disabilities don’t mean that they are excused for childlike behaviour.

“We understand that we work with adults with varying degrees of special needs but it doesn’t mean that they can act out,” says de Maaker, who has been working with people with special needs for more than 15 years.

“It’s not easy for every person with autism, but our aim here is to make them independent individuals and, through art, the shop and coffee corner, we bring out the best in them.”

When Omar first arrived, she wouldn’t leave de Maaker’s side.

'அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்'

23.02.2016,
ஈக்காட்டுத்தாங்கல் : ''அரசு தேர்வுகளை கடினமாக யாரும் கருத வேண்டாம்; கடின உழைப்பு இருந்தால் யாராலும் வெற்றி பெற முடியும்,'' என, தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசினார்.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகன் கூட்டமைப்பு அறக்கட்டளை சார்பில், இலவச அரசு தேர்வு பயிற்சி மையம் திறப்பு விழா நேற்று ஈக்காட்டுத்தாங்களில் நடைபெற்றது. பயிற்சி மையத்தை ரோட்டரி சங்க மாவட்ட கவர்னர் சி.ஆர்.ராஜு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில அரசு மாற்றுத்திறனாளிகள் ஆணையர் டாக்டர் மணிவாசன் பேசுகையில், ''அரசு பணிகளில் மாற்றுத் திறனாளிகள் ஆண்டுதோறும் அதிகளவில் தேர்ச்சி பெற்று வருகின்றனர். அரசுத்தேர்வுகளை கடினமாக கருத வேண்டாம். கடின உழைப்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்,'' என்றார்.

இலவச பயிற்சி மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வார இறுதி நாட்களில் டி.என்.பி.எஸ்சி., - ஆர்.ஆர்.பி., வங்கித் தேர்வுக்களுக்கான பயிற்சி வகுப்புகளும் மற்றும் தமிழ் மற்றும் ஆங்கில தட்டச்சு பயிற்சிகளும் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

'சலாம்.. எனது வியத்தகு ரசிகர்'- விக்ரமின் நெகிழ்ச்சி அனுபவம்

23.02.2016
மலையாள தனியார் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் விழாவில், நடிகர் விக்ரமின் அணுகுமுறையால் அவரை நெருங்கிய ரசிகர் மட்டுமின்றி பார்வையாளர்களும் வெகுவாக நெகிழ்ந்தனர்.

கேரளாவில் நடைபெற்ற ஏசியாநெட் தொலைக்காட்சி சேனல் விருது வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார் நடிகர் விக்ரம். 'ஐ' படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகர் விருது அவருக்கு அளிக்கப்பட்டது.

அந்த விருது வழங்கும் விழாவில் தன்னைக் காண வந்த ரசிகர் ஒருவரை அங்கிருந்த பாதுகாவலர்கள் அப்புறப்படுத்தினர். அப்போது பாதுகாவலர்களிடம் இருந்து அந்த ரசிகரை விடுவித்து, அவருடன் செல்ஃபி எடுத்து அனுப்பி வைத்த வீடியோ தொகுப்பு இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

அங்கிருந்த பார்வையாளர்கள் மட்டுமின்றி, ரசிகர்களும் நடிகர் விக்ரமின் இந்த செயலைப் பாராட்டி தங்களது கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார்கள்.

உண்மையில், அந்நிகழ்ச்சியில் நடந்தது என்ன என்பது குறித்து விக்ரம் தரப்பில் விசாரித்த போது, "பாலக்காட்டில் இருக்கும் அந்த ரசிகர் பெயர் சலாம். அவர் விக்ரமின் தீவிரமான ரசிகர். அவர் ஒரு மாற்றுத்திறனாளி. விருது வழங்கும் விழாவில் விக்ரமுக்கு தீவிர பாதுகாப்பு அளிக்கப்பட்டு, முன்வரிசையில் அமர்ந்திருந்தார். அந்த ரசிகர் எப்படி பின்னால் இருந்து அனைவரையும் கடந்து வந்தார் என்பது தெரியவில்லை.

விக்ரமை நெருங்கி கட்டிப் பிடித்துக் கொண்டார். இதனை சற்றும் எதிர்பாராத பாதுகாவலர்கள் சலாமை வலுக்கட்டாயமாக அங்கிருந்து அப்புறப்படுத்த முயற்சித்தார்கள். இதனை சற்றும் எதிர்பாராத விக்ரம், பாதுகாவலர்களிடம் பேசி அவரை விடுவித்தார்.

அதனைத் தொடர்ந்து சலாமுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டார். செல்ஃபி எடுத்து முடித்தவுடன், விக்ரமை சலாம் கட்டிப் பிடித்து கன்னத்தில் முத்தம் கொடுத்தார். விக்ரமின் இந்தச் செயலுக்கு அவருடன் அமர்ந்திருந்த முன்னணி நடிகர்கள் பலரும் பாராட்டினார்கள்.

இணையத்தில் அந்த வீடியோ வைரலாகி, விக்ரமை 'வியத்தகு நடிகர்' என வெகுவாகக் கொண்டாடி வருவதை அவரிடம் அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அதற்கு "உண்மையில், எனக்குக் கிடைத்த வியத்தகு ரசிகர் சலாம்தான். வேறு மாநிலத்தில் என் மீது அப்படி அன்பைப் பகிர்ந்த நிகழ்வு எனக்கு புதிது மட்டுமின்றி இதுவரை அனுபவிக்காத ஓர் அற்புதத் தருணம்" என்று சொல்லி, அந்த செல்ஃபீயை பத்திரப்படுத்தி வைத்திருக்கிறாராம் விக்ரம்.

மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி: விண்ணப்பிக்க அழைப்பு

21.02.2016
ஈக்காட்டுதாங்கல் : மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டிகளுக்கு, விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை சார்பில், மாநில அளவிலான, 15வது மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டி, மார்ச் 5ம் தேதி, நேரு பூங்கா விளையாட்டு மைதானத்தில் காலை 7:00 மணி முதல், இரவு 7:00 மணி வரை நடக்கிறது. அதில், 52 வகையான விளையாட்டு போட்டிகள் நடக்கின்றன. பங்கேற்க விரும்புவோர், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் கூட்டமைப்பின் அறக்கட்டளை, எண், 10, நான்காவது குறுக்கு தெரு, பாலாஜி நகர், ஈக்காட்டுதாங்கல் என்ற முகவரிக்கு நேரில் சென்று, விண்ணப்பங்களை பெற்று, வரும், 25ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.மேலும் விவரங்களுக்கு, 98403 05804, 98404 33964 ஆகிய அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Saturday, February 20, 2016

சட்டசபையில் 110வது விதியின் கீழ் மாற்று திறனாளிகளுக்கு பல்வேறு சலுகை அளித்து ஜெயலலிதா அறிவிப்பு

20.02.2016, சென்னை
முதல்-அமைச்சர் ஜெயலலிதா இன்று 110 வது விதியின் கீழ் அறிக்கை ஒன்றை வாசித்தார் அதில் கூறி இருப்பதாவது:-

மாற்றுத் திறனாளிகளை சமுதாயத்தில் ஓர் அங்கமாக அனைவரும் ஏற்பதற்கும், வளர்ச்சியில் மாற்றுத் திறனாளிகளும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு சம வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதற்கும், அவர்களின் முழு பங்கேற்பை உறுதி செய்வதற்கும் வகை செய்யும் பல்வேறு திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. எனது முந்தைய ஆட்சிக் காலத்தில் 1993-ஆம் ஆண்டிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான தனி இயக்ககத்தை ஏற்படுத்தியதோடு மாற்றுத் திறனாளிகளுக்கு என, விரிவான மாநிலக் கொள்கையையும் 1994-ஆம் ஆண்டே நான் வெளியிட்டேன்.

2011-ஆம் ஆண்டு எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின் மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு வழங்கிட பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
6 வயதுக்குட்பட்ட பார்வை திறன் குறைபாடுடைய மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையங்கள் 5 மாவட்டங்களில் மட்டும் நடத்தப்பட்டு வந்த நிலையில், மேலும் 20 மாவட்டங்களில் இது விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த ஆரம்ப நிலை பயிற்சி மையத்திற்கு குழந்தைகளை அழைத்து வரும் பாதுகாவலர்களுக்கு கட்டணமின்றி, அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் சலுகை வழங்கியதுடன் நாளன்றுக்கு அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயணச் செலவுத் தொகை 20 ரூபாயிலிருந்து 40 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. செவித் திறன் பாதிக்கப்பட்ட மாணாக்கர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சாதாரண காதொலிக் கருவிகளுக்குப் பதிலாக 10,000 ரூபாய் மதிப்புள்ள அதிக திறன் வாய்ந்த காதொலிக் கருவிகள் வழங்கப்படுகின்றன. பார்வை குறைவுள்ள குழந்தைகள் படிப்பதற்கு எளிதாக படிக்க வகை செய்யும் விதமாக எழுத்துக்களை பெரிதாக்கி பார்க்கக் கூடிய கண்ணாடிகள் வழங்கப்படுகின்றன.

12 மாவட்டங்களில் மட்டும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் செயல்பட்டு வந்த தொழிற் பயிற்சி மையங்கள் மேலும் 20 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளிகள் தொழில் துவங்க மத்திய கூட்டுறவு வங்கிகளிலிருந்து பெறப்படும் கடன் தொகைக்கான வட்டியினை அரசே செலுத்துகிறது. மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் கீழ் இயங்கும் அரசு சிறப்புப் பள்ளிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற சிறப்புப் பள்ளிகளில் 10-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு 5,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது. மேலும், இந்தப் பள்ளிகளில் விடுதிகளில் தங்கிப் பயிலும் மாணாக்கர்களுக்கு மாதமொன்றிற்கு, வழங்கப்பட்டு வரும் உணவு ஊட்டுச் செலவினம் 450 ரூபாயிலிருந்து 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. விடுதியில் தங்காமல் இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணாக்கர்களுக்கு சத்துணவுத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட சாதாரண மடக்கு குச்சிகளுக்குப் பதிலாக ஒளிரும் மடக்குக் குச்சிகள் வழங்கப்படுகின்றன. மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு அவர்களின் இயலா தன்மையின் வகை, பாதிப்பின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் அவர்களுக்கு உள்ளடக்கிய கல்வி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே முதன் முறையாக மாற்று திறன் கொண்ட, குழந்தைகளுக்கென மாநில ஆதார வள மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 108 நகராட்சிகளில் மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்துவதற்கு வசதியாக பொது கட்டடங்களில் அவர்களுக்கென தனி கழிப்பிடங்கள் 8 கோடியே 20 லட்சம் ருபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ளன. மாற்றுத் திறனாளி மாணாக்கர்களுக்கு 500 முதல் 3,500 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. 1,500 ரூபாய் முதல் 3,000 ரூபாய் வரை வழங்கப்பட்டு வந்த வாசிப்பாளர் உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஆண்டு தோறும் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட,
பெட்ரோல் ஸ்கூட்டர்கள் 1,000 எண்ணிக்கை வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கென 32 நகரும் சிகிச்சைப் பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன. மன நலம் பாதிக்கப்பட்டோருக்கான மறு வாழ்வு இல்லங்கள் அரசின் நிதி உதவியுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 11 மாவட்டங்களில் செயல்பட்டு வந்தன. மேலும்
21 மாவட்டங்களில் இந்த இல்லங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே போன்று, மன வளர்ச்சிக் குன்றியோருக்கான இல்லங்கள் 21 மாவட்டங்களில் செயல்பட்டு வந்த நிலையில், மேலும்
11 மாவட்டங்களில் அது போன்ற இல்லங்கள் துவங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கட்டப்படும் குடியிருப்புகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

இதே போன்று, பசுமை வீடுகள் திட்டத்திலும், தொகுப்பு வீடுகள் திட்டத்திலும் 3 சதவீதம் ஓதுக்கீடு செய்யப்படுகிறது. தேசிய வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 50 சதவீதம் அல்லது 4 மணி நேரம் வேலைக்கே முழு ஊதியம் வழங்கப்படுகிறது. எனது தலைமையிலான அரசு செயல்படுத்தும் இத்தகைய திட்டங்களால் தான் மாற்றுத் திறனாளிகளின் நலனைப் பாதுகாப்பதில் சிறந்த மாநிலத்திற்கான விருதை 2013-2014 ஆம் ஆண்டில் பெற முடிந்தது. மாற்றுத் திறனாளிகள் மேலும் சில சலுகைகள் கேட்டு அரசுக்கு கோரிக்கைகள் வைத்துள்ளனர். இதன் அடிப்படையில் தற்போது சில சலுகைகளை அறிவிக்க விரும்புகிறேன்.

1. தற்போது மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவித் தொகையை பெறுவதற்கு குறைபாட்டின் அளவு 60 சதவீதம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது 40 சதவீதம் என குறைக்கப்படும். இதனால், 40 சதவீதம் குறைபாடு உள்ள மாற்று திறனாளிகளும் ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித் தொகை பெற இயலும்.

2. மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு மாற்றுத் திறனாளிகள் ஆதரவற்றோர் அதாவது னுநளவவைரவந என்ற நிலையில் இருக்க வேண்டும் என விதிமுறைகள் உள்ளன. எவ்வித வருவாய் இல்லாதவராகவும், 50,000 ரூபாய்க்கு அதிகமான சொத்துகள் இல்லாதவராகவும், வறுமைக் கோட்டிற்கு மேல் உள்ள 20 வயதுக்கு மேற்பட்ட மகன், மகனின் மகன் அதாவது பேரன், கணவர் அல்லது மனைவி இல்லாதவரே ஆதரவற்றோர் என வரையறுக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளை பொறுத்தவரை ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்படும். அதாவது, வேலை வாய்ப்பற்ற 40 சதவீதத்திற்கு மேல் குறைபாடுள்ள, மாற்றுத் திறனாளிகள் மாதாந்திர உதவித் தொகை பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவர்.

3. மாற்றுத் திறனாளிகளுக்கு அரசுப் பணிகளில் 3 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கையாகும். இந்த இட ஓதுக்கீட்டை அரசு தவறாமல் கடைபிடித்து வருகிறது. எனது தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், இதுவரை 5,633 மாற்றுத் திறனாளிகள் அரசு மற்றும் அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான ஒதுக்கீடு முழுமையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், தலைமைச் செயலாளர் தலைமையில் உள்ள உயர்மட்டக் குழு கண்காணித்து வருகிறது.

4. மாற்றுத் திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை கண்காணிக்கவும், அரசுக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும் சமூக நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்ட மாநில ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்படும்.

என்னால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள சலுகைகள் மாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் ஒளி ஏற்றும் என நான் திடமாக நம்புகிறேன்.

இவ்வாறு அதில் கறபட்டு உள்ளது

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் தவித்த மாற்றுத்திறனாளிகள் : சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு

20.02.2016, சென்னை : தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 8ம் தேதி முதல் சேப்பாக்கம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததால் மாற்று திறனாளிகள் நேற்று முன்தினம் சென்னை எழிலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தங்கவைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் குடிநீர், கழிவறை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குப்புசாமி என்பவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று மாற்றுத்திறனாளி குப்புசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று 3வது நாளாக மாற்றுத்திறனாளிகள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்றிரவு ஸ்டேடியத்தில் மின்வெட்டை ஏற்படுத்தினர். இதனால் வெளிச்சம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். ஸ்டேடியத்துக்குள் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மூட துணியில்லாமல் கொசுக்கடியாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக தங்களை அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக போலீசார் மீது மாற்றுத் திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாரின் இந்த அடக்குமுறையால் மேலும் பல மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘‘தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும்’ என்று மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதம்

20.02.2016, சேலம்: வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கக்கோரி, சேலத்தில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. சேலம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற இயக்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் முன், நேற்று, பல்வேறு கோஷங்கள் போட்டவாறு, மாற்றுத்திறனாளிகள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். மாநில தலைவர் முனுசாமி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் செல்லப்பன் கோரிக்கையை வலியுறுத்தி பேசினார். எந்த பணியையும் மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, அவர்களுடைய குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும். மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்பில், மாற்றுத்திறனாளிகளுக்கு, மூன்று சதவீத இட ஒதுக்கீடு இருந்தும், வேலை வழங்காமல் புறக்கணித்து வருகின்றனர் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

முதல்வர் சலுகைகள் அறிவிப்பு: மாற்றுத்திறனாளிகள் போராட்டம் வாபஸ்

 20.02.2016
தமிழக முதல்வர், மாற்றுத் திறனாளிகள் கோரிக்கையை ஏற்று சில முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவையில் வெளியிட்டதால் கடந்த 4 நாட்களாக அவர்கள் நடத்தி வந்த போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

40 சதவீத உடல் உறுப்பு குறைபாடு இருந்தால் உதவித்தொகை வழங்க வேண்டும். அரசு வேலை வாய்ப்புகளில் 3 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆகியவை உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 4 நாட்களாக மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கம் சார்பில் போராட்டம் நடத்தி வந்தனர்.

இதில் முக்கியமான கோரிக்கைகளை ஏற்றுக் கொள்வதாகவும், சில கோரிக்கைகளை பரிசீலனை செய்து நிறைவேற்ற கண்காணிப்புக் குழு மற்றும் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதாகவும் தமிழக முதல்வர் சனிக்கிழமை சட்டப் பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்தார்.

இதையடுத்து கடந்த 4 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மாற்றுத் திறனாளிகள் கூட்டியக்கத்தினர் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். சென்னை எழும்பூரிலுள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் கடந்த 4 நாட்களாக கைது செய்து அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகள் சுமார் 400 பேர் வெற்றி முழக்கமிட்டு முதல்வரின் அறிவிப்பை வரவேற்றனர். மகிழ்ச்சியுடன் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவிக் கொண்டனர்.

'40 சதவீதம் ஊனம் உள்ளவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என தமிழக முதல்வரின் அறிவிப்பால் சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான மாற்றுத் திறனாளிகளூக்கு உதவித் தொகை பெற்று பயனடைவர்' என டிசம்பர் 3 இயக்கத்தின் தலைவர் டி.எம்.என்.தீபக் தெரிவித்தார்.

மாற்றுத் திறனாளிகள் கோயம்பேடு வரை செல்வதற்கான வாகன வசதியை போலீஸார் செய்து கொடுத்தனர். ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த 2 நாட்களாக நடிகர் விசால் உணவு ஏற்பாடு செய்துக் கொடுத்தார் என மாற்றுத் திறனாளிகள் நன்றியுடன் தெரிவித்தனர்.

மாற்றுத்திறனாளிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி..! 4 நாள் போராட்டம் வாபஸ்….


6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் கடந்த 4 நாட்டகளாக எமது கூட்டியக்கம் சால்பில் தொடர் போராட்டம் நடத்தி வந்த நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், முக்கிய கோரிக்கைகளின் ஒன்றான 40 சதவீத ஊனமிருந்தால், உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும், ஆதரவற்றோராக இருந்தால்தான் உதவித்தொகை தரப்படும் என்ற விதியை ரத்து செத்து செய்வதாகவும் அறிவித்துள்ளார். அத்துடன், சட்டப்படியான 3 சதவீத பணியிடங்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குவதை கண்காணிக்க அரசு தலைமை செயலாளர் தலைமையில் கண்காணிப்புக்குழுவும், சமூக நலத்துறை அமைச்சர் தலைமையில் மாநில ஒருங்கிணைப்புக்குழு அமைப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனை எமது கூட்டியக்கம் மகிழ்ச்சியோடு வரவேற்கிறது. தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கிறது.

மாற்றுத்திறனாளிகள் தங்களுடைய கோரிக்கைகளை ஒவ்வொரு முறையும் போராடித்தான் பெற வேண்டியிருக்கிறது. அந்த வகையில் எங்களுடைய கூட்டியக்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தினாலும், மாற்றுத்திறனாளிகளின் ஒறறுமையாலும் இந்த வெற்றி கிடைத்துள்ளது.

இந்த போராட்டம் வெற்றி அடைய எங்களுக்கு ஆதரவளித்த அனைத்து ஜனநாயக அமைப்புகளுக்கும், அரசியல் கட்சி தலைவர்களுக்கும், பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்களுக்கும் எங்களுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கிறோம்.

இந்த போராட்ட களத்தில் உயிரை இழந்த வேலுhர் மாவட்ட மாற்றுத்திறனாளி திரு.குப்புசாமி அவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலியோடு நினைவு கூறுகிறோம். அவருடைய குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

இத்துடன் நாங்கள் நடத்தி வந்த இந்த தொடர் போராட்டத்தை முடித்துக்கொள்கிறோம்.

பா. ஜான்சிராணி தலைவர்-TARATDAC
டி.எம்.என். தீபக் தலைவர்,டிச-3 இயக்கம்
பி. மனோகரன் இயக்குநர்-NFB
இ.கே. ஜமால் அலி,  தலைவர்-State Deaf Fedn

Cultural fest for deaf

GUWAHATI, Feb 19 - The 15th All India Cultural Festival for the Deaf will be held here from March 25 to 29. The programme is being organised by All India Deaf Arts and Cultural Society, New Delhi and is being hosted by Assam Association of the Deaf.

Nearly 1,400 participants and workers from across the country are likely to take part in the event.

“An organising committee has been formed for the purpose with Governor of Assam PB Acharya as the chief patron, Chief Minister Tarun Gogoi and Union minister Sarbananda Sonowal as patrons among others,” stated a release.

The organisers have prepared a budget of Rs 22 lakh for the event.

Friday, February 19, 2016

Hearing-impaired Dies During Stir

19.02.2016, CHENNAI: E Kuppuswami (67) would have been like many others who glance through news reports on the ongoing protests by persons with disabilities (PwD). What brought him to Chennai on Wednesday to participate in the protest was a road accident 10 years ago that ruined his hearing.

The loss of one of the senses made him more sensitive to the needs of PwD and it was since then that he began taking part in protests demanding rights for PwD.

He travelled all the way from Gudiyattam town in Vellore district to take part in one of the strongest protests by the PwD community demanding their rights.

On Wednesday night, he was in Rajarathinam stadium, Egmore, where police shifted the protesting PwDs. It was there that he suffered severe chest pain. He died early Thursday in Royapettah hospital.

From what his relatives say, his story was a reminder of the thin line between “normal” persons and PwD.

“Around ten years ago, my father met with a road accident. Though we thought he recovered from it, only a few months later we realised that he was losing his hearing,” said K Saravanan, Kuppuswami’s elder son.

As the shop he was working at before closed in the town, he began taking care of K Veerapandi, who could move only on a wheel chair.

It is not just that he grew sensitive towards needs of PwD, he also started strongly advocating for their rights by participating in protests. “When he learnt I was going to Chennai to participate in the protest, he said he would come along to support us and packed his bag,” said K Veerapandi, along with whom Kuppuswami reached Chennai on Wednesday morning, when the four organisations resumed their protest over a set of demands.

Kuppuswami, besides taking care of Veerapandi, would do menial work like cutting grass and managed to make his ends meet. “He never actually bothered about his disability. But always participated actively in protests by PwDs for their rights,” says Veerapandi.

On Wednesday, he was arrested near Labour Statue on the Marina along with other protesting PwDs and was moved to the stadium where they continued their protest. “Around 9-30pm, Kuppuswami complained of chest pain and was resting, but within a few minutes he started vomiting blood. We immediately took him to Royapettah GH by a police van,” said B Radhakrishnan, state secretary, Tamil Nadu Association for the Rights of All Type of Differetly Abled Caregivers.“At 3.30 on Thursday morning, the doctors said he died. We could not believe it,” he added.

While his death was discussed in the State Assembly with a few leaders trying to make mileage out of the issue, the PwDs continued to their protest in the stadium, bearing the shock of the sudden demise of one of them.

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாற்று திறனாளிகள் 3–வது நாளாக போராட்டம்

சென்னை, பிப். 19–
மாற்று திறனாளிகள் 3–வது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாற்று திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும். 40 சதவீதம் ஊனம் இருந்தால் பென்சன் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் கடந்த 17–ந்தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை சங்கம், தேசிய பார்வையற்றோர் இணையம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு ஆகியவை இந்த போரட்டத்தை நடத்தி வருகின்றன.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்று திறனாளி குப்புசாமி உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார். மாற்று திறனாளிகள் ஒரே இடத்தில் இருந்து தங்கள் போராட்டத்தை தொடர ஏற்பாடு செய்யப்பட்டதையடுத்து எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று 3–வது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இவர்களது போராட்டத்திற்கு மாற்றுத் திறனாளிகள் பார்வையற்றோர் பட்டதாரிகள் சங்கம் ஆதரவு அளித்துள்ளது. சுமார் 400 பேர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பிப்ரவரி 21-இல் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் பயிற்சி

கோவை, 19 February 2016
மாற்றுத் திறனாளிகளுக்கான ஒரு நாள் சுயதொழில் பயிற்சி பிப்ரவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு, சுயதொழில்களில் மாற்றுத் திறனாளிகள் ஈடுபட கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு கடந்த 8 ஆண்டுகளாக பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து வழிகாட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கோவை, தடாகம் சாலை, கே.என்.ஜி. பிரிவில் அமைந்துள்ள முத்து எம்பவர்மென்ட் அறக்கட்டளை மற்றும் கேலிபர் மாற்றுத் திறனாளிகள் அமைப்பு ஆகியன இணைந்து நடத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுயதொழில் பயிற்சி ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 21) நடைபெறவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ளும் மாற்றுத் திறனாளிகளுக்கு சுயதொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் மற்றும் பயிற்சிகள், அரசின் நிதி உதவிகள், தனியார் நிறுவனங்கள் வழங்கும் வேலைவாய்ப்புகள் ஆகியவை எடுத்துரைக்கப்படும். பயிற்சியில் பங்கேற்க 9442556168, 9944556168 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் பிப்ரவரி 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பெயர்களைப் பதிவு செய்யவேண்டும்.

Thursday, February 18, 2016

திறந்த வெளியில் கொட்டும் பனியில் விடிய விடிய அடைத்து வைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள்: ஒருவர் பலி


18.02.2016, சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளி காட்பாடி குப்புசாமி உடல்நிலை பாதிக்கப்பட்டு மரணமடைந்துள்ளது போராட்டக்காரர்களிடையே அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.உயிரிழந்த குப்புசாமி உடலுக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவீத இட ஒதுக்கீட்டை அமுல்படுத்த வேண்டும். 40 சதவீதம் ஊனம் இருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித் தொகையை குறைந்த பட்சம் ரூ.5 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என்பது உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறளாளிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழிலகத்தில் திரண்ட அவர்கள் அங்கிருந்து பேரணியாக சென்று தலைமை செயலகத்தை முற்றுகையிட திட்டமிட்டனர். சென்னை புறநகர் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து வாகனங்களில் எழிலகம் வந்த மாற்றுத்திறனாளிகள் 50 பேரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.அவர்கள் அனைவரையும் போலீசார் எழும்பூர் ராஜ ரத்தினம் மைதானத்தில் தங்க வைத்தனர். இரவிலும் அவர்கள் அங்கேயே இருந்தனர். இந்த நிலையில் இரவு 9 மணியளவில் ஸ்டேடியத்தில் தங்கியிருந்த வேலூர் மாவட்டம், காட்பாடி தாலுகா மாதனூரை சேர்ந்த மாற்றுத்திறனாளி குப்புசாமி, 67 தலைவலிப்பதாக கூறினார். திடீரென்று அவர் ரத்தவாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனடியாக அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி குப்புசாமி இன்று காலை பரிதாபமாக இறந்தார். இதனிடையே குப்புசாமி உயிரிழப்புக்கு, திறந்தவெளியில் மாற்றுத்திறனாளிகள் அடைக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம். அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. உரிய சிகிச்சை தராததே குப்புசாமி உயிரிழக்க காரணம் எனவும் குற்றஞ்சாட்டி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். மரணமடைந்த குப்புசாமி வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த மாதனூர் ஆத்தோரம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர். இவருக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.தற்போது குப்புசாமியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர். மாற்றுத்திறனாளி இறந்த தகவல் அறிந்ததும் தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றார். மறைந்த குப்புசாமி உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். இதேபோன்று கைது செய்யப்பட்டுள்ள சின்ன சேலத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி இராஜாராம், 40 என்பவர் மயக்கமடைந்த நிலையில் இராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவரையும் ஸ்டாலின் சந்தித்து நலம் விசாரித்தார். இது குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ள ஸ்டாலின், மாற்றுத் திறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களுக்கும், அவரை இழந்து வாடும் மற்ற மாற்றுத் திறனாளி போராளிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். இந்த போராட்டத்தில் பங்கேற்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராமை சந்தித்து உடல்நலம் விசாரித்தேன். அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கு அரசு வேலைவாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி விட்டு இதுவரை நிறைவேற்றாமல் இருக்கும் அதிமுக அரசு, போராடும் மாற்று திறனாளிகளை குண்டுக்கட்டாக காவல் துறையை வைத்து தூக்கிப் போடுவதும், கைது செய்வதுமாக இருந்தது. இன்றைக்கு அ.தி.மு.க. அரசின் பாராமுகத்திற்கு ஒரு மாற்றுத் திறனாளியின் உயிர் பறி போயிருக்கிறது. அதிமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ஆட்சி முடியப் போகும் தருவாயில் இருக்கும் அ.தி.மு.க. அரசிடம் இனி போராடி நியாயம் கிடைக்காது என்பதால், மாற்றுத் திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, தி.மு.க. அரசு அமையும் வரை காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். தி.மு.க அரசு அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

போராட்டத்தை கைவிடுங்கள்; மாற்று திறனாளிகளுக்கு இனியும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது : ஸ்டாலின்

18.02.2016
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கை:
’’அரசு பணிகளில் மூன்று சதவீத இடஒதுக்கீடு, மற்ற மாநிலங்களைப் போல் 40 சதவீத குறைபாடுகள் இருந்தாலே உதவி, அனைத்து மாற்று திறனாளிகளுக்கும் உதவித் தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராடிய மாற்றுதிறனாளி காட்பாடி குப்புசாமி திடீரென்று மரணம் அடைந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்தேன். ராயப்பேட்டை அரசு மருத்துமனைக்குச் சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அவரது உறவினர்களுக்கும், அவரை இழந்து வாடும் மற்ற மாற்றுதிறனாளி போராளிகளுக்கும் என் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டேன். இந்த போராட்டத்தில் பங்கேற்று அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ராஜாராம் அவர்களையும் சந்தித்து உடல்நலம் விசாரித்தேன்.

மாற்று திறானாளிகள் போராட்டம் என்றதும் காலை உணவு கூட சாப்பிடாமல் ஓடோடிச் சென்று அவர்களை சந்தித்து குறைகளை தீர்த்து வைத்தவர் தலைவர் கலைஞர். கழக ஆட்சியில் மாற்று திறனாளிகள் அனைவருக்குமே உதவித்தொகை அளிக்கப்பட்டது. ஆனால் இந்த ஆட்சியில் "ஆதரவற்ற மாற்றுதிறனாளிகளுக்கு" மட்டுமே உதவித்தொகை என்று மாற்றப்பட்டு விட்டது. இந்த சூழ்நிலையில் தங்கள் பத்து அம்ச கோரிக்கைகள வலியுறுத்தி போராடியவர்களை அழைத்துப் பேசி தீர்வு காண முதலமைச்சருக்கோ, அமைச்சர்களுக்கோ அக்கறையும் இல்லை. ஆர்வமும் இல்லை. அதிமுக தேர்தல் அறிக்கையிலேயே மாற்று திறனாளிகளுக்கு அரசு வேலை வாய்ப்பில் மூன்று சதவீத இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று கூறி விட்டு இது வரை நிறைவேற்றாமல் இருக்கும் அதிமுக அரசு, போராடும் மாற்று திறனாளிகளை குண்டுக் கட்டாக காவல்துறையை வைத்து தூக்கிப் போடுவதும், கைது செய்வதுமாக இருந்தது. இன்றைக்கு அதிமுக அரசின் பாராமுகத்திற்கு ஒரு மாற்றுத் திறனாளியின் உயிர் பறி போயிருக்கிறது. அதிமுக அரசின் அராஜகத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ஆட்சி முடியப் போகும் தருவாயில் இருக்கும் அதிமுக அரசிடம் இனி போராடி நியாயம் கிடைக்காது என்பதால், மாற்று திறனாளிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு, கழக அரசு அமையும் வரை காத்திருக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன். போராட்டத்தை கைவிடுங்கள் என்று வேண்டுகோள் விடுப்பது உங்கள் கோரிக்கைகளை கைவிடுங்கள் என்ற அர்த்தத்தில் அல்ல. மாற்று திறனாளிகளுக்கு இனியும் உயிர் சேதம் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். கழக அரசு அமைந்ததும் உங்கள் கோரிக்கைகள் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.’’

மாற்றுத்திறனாளி மரணம் குறித்து பேச அனுமதி மறுப்பு: 5 கட்சிகள் வெளிநடப்பு

சென்னை, பிப். 18–
சட்டசபையில் இன்று முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110–வது விதியின் கீழ் பேசி முடித்த பிறகு தே.மு.தி.க., மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, காங்கிரஸ், பா.ம.க. புதிய தமிழகம் ஆகிய கட்சிகள் சார்பில் போராட்டத்தின் போது இறந்த மாற்றுத் திறனாளி மற்றும் பல்வேறு பிரச்சனைகள் குறித்து பேச அனுமதி கேட்டனர்.

இதற்கு சபாநாயகர் அனுமதிக்காததால் அந்த கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

வெளிநடப்பு செய்த பிறகு சட்டசபைக்கு வெளியே தே.மு.தி.க. எம்.எல்.ஏ. பாபு முருகவேல் நிருபர்களிடம் கூறியதாவது:–

மாற்றுத்திறனாளிகள் 6 அம்ச கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த அரசு அவர்கள் மீது இதுவரை எந்த அக்கறையும் காட்டவில்லை. போராட்டத்தில் ஈடுபட்ட வேலூரை சேர்ந்த குப்புசாமி என்ற மாற்றுத்திறனாளி மரணம் அடைந்து விட்டார். அதுபற்றி பேச அனுமதி கேட்டோம். சபாநாயகர் அனுமதிக்கவில்லை.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அங்கன்வாடி ஊழியர்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் பற்றி பேச 22 சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானங்களை கொடுத்து இருக்கிறோம். ஆனால் எந்த பிரச்சனை குறித்தும் பேச அனுமதிக்கவில்லை. எனவே வெளிநடப்பு செய்தோம்.

மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. தங்கவேல் கூறியதாவது:–

இறந்த மாற்றுத் திறனாளி குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நஷ்டஈடு கொடுக்க வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பிரச்சனை குறித்து பேச அனுமதி கேட்டோம். அனுமதிக்காததால் வெளிநடப்பு செய்தோம். முதல்–அமைச்சர் ஜெயலலிதா தேர்தல் வாக்குறுதி அனைத்தையும் நிறைவேற்றி விட்டதாக கூறி இருக்கிறார். ஆனால் 110–வது விதியின் கீழ் சொன்ன பல திட்டங்களை நிறைவேற்றவில்லை.

தமிழ்நாடு முழுவதும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவோம் என்று தேர்தல் அறிக்கையில் சொன்னார்கள். ஆனால் தற்போது சென்னைக்கு மட்டும் மூத்தகுடிமக்களுக்கு இலவச பஸ் பாஸ் அதுவும் 10 டோக்கன் கிடைக்கும் என்கிறார்கள். இந்த அறிவிப்பை கடைசி நாளில் அறிவிக்கிறார்கள் என்றார்.

இதே போல விஜயதாரணி (காங்கிரஸ்), கணேஷ்குமார் (பா.ம.க.), கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) ஆகியோரும் வெளிநடப்புக்களுக்கான காரணங்களை நிருபர்களிடம் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி உயிரிழப்பு: ராயப்பேட்டையில் போலீஸ் குவிப்பு!

18.02.2016 சென்னை: போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளி ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ள சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



அரசுப் பணியிடங்களில் 3 சதவீத வேலைவாய்ப்பு, 40 சதவீத குறைபாடுள்ளவர்களையும் மாற்றுத் திறனாளியாக அங்கீகரித்தல், மாதாந்திர உதவித்தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து ஐயாயிரமாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, மாற்றுத் திறனாளிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், சாலை மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அப்போது, உடல் நலம் பாதிக்கப்பட்ட வேலூரை சேர்ந்த குப்புசாமி (67) என்ற மாற்றுத்திறனாளி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் குப்புசாமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளார்.



தற்போது குப்புசாமியின் உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளதால் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.

இதனிடையே குப்புசாமி உயிரிழப்புக்கு, திறந்தவெளியில் மாற்றுத்திறனாளிகள் அடைக்கப்பட்டதே உயிரிழப்புக்கு காரணம். அங்கு மாற்றுத்திறனாளிகளுக்கு எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. அதேபோல், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குப்புசாமிக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை. உரிய சிகிச்சை தராததே குப்புசாமி உயிரிழக்க காரணம் எனவும் குற்றஞ்சாட்டி மாற்றுத்திறனாளி சங்கத்தினர் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.