FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Wednesday, February 24, 2016

40 சதவீத ஊனம், பணி இல்லாமல் இருந்தால் உதவித்தொகை புதிய அரசாணைக்கு கூட்டியக்கம் வரவேற்பு

40 சதவீத ஊனமிருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி எமது மாற்றுத்திறனாளிகள் சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் தொடர் போராட்டம் நடத்தப்பட்டது. இந்நிலையில், 20.02.2016 அன்று தமிழக சட்டப்பேரவையில் 110-வது விதியின் கீழ் முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டார். அதில் முக்கிய கோரிக்கையான 40 சதவீத ஊனமிருந்தால், உதவித்தொகை வழங்கப்படும் என்றும், ஆதரவற்றோராக இருந்தால்தான் உதவித்தொகை தரப்படும் என்ற விதியையும் ரத்து செய்வதாகவும் முதலமைச்சர் அறிவித்தார்.

இதனையடுத்து சமூக நலத்துறை 22.02.2016 தேதியிட்ட புதிய அரசாணை எண்.27-ஐ சமூக நலத்துறை அரசு முதன்மை செயலாளர் திரு.பி. சிவசங்கரன் வெளியிட்டுள்ளார் அதில் கூறப்பட்டுள்ளதாவது: தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.1000/- வழங்க நிர்ணயிக்கப்பட்டுள்ள ஊனத்தின் அளவு 60 சதவீதத்திலிருந்து 40 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இதன் மூலம் 40 சதவிகிதத்திற்கு மேல் ஊனம் இருந்தாலே இனிமேல் உதவித்தொகை வழங்கப்படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருமானம் இல்லாதவராகவும், வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவராகவும், குடும்ப சொத்து மதிப்பு ரூ.50,000-க்கு குறைவாக இருக்க வேண்டும், குடும்பத்தில் 20 வயதுக்கு மேற்பட்ட ஆண் வாரிசு இருக்க கூடாது என்பது உள்ளடக்கிய ஆதரவற்றோராக இருக்க வேண்டும் என்ற விதி மாற்றுத்திறனாளிகளுக்கு தளர்த்தி, பணி இல்லாத மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் புதிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின் பெயர் மாற்றம்
சமூக பாதுகாப்பு திட்டத்தில் செயல்படுத்தப்படும் ஆதரவற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்பதை மாற்றி, மாற்றுத்தினாளிகளுக்கான உதவித்தொகை திட்டம் என்று இனிமேல் அழைக்கப்படும் என்றும் அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அரசாணைக்கு கூட்டியக்கம் வரவேற்பு
இந்த புதிய அரசாணை வெளியானதை அடுத்து, எமது கூட்டியக்கத்தின் தலைவர்கள் எஸ். நம்புராஜன், டி.எம்.என்.தீபக், பி. முனோகரன் ஆகியோர் தலைமை செயலகத்தில் சமூக நலத்துறை செயலாளர் திரு.பி.சிவசங்கரன் அவர்களை சந்தித்தனர். அப்போது இந்த அரசாணை மூலம் 10 லட்சத்திற்கும் மேலான மாற்றுத்திறனாளிகள் பயனடைவார்கள் என திரு.சிவசங்கரன் தெரிவித்தார்.

இந்த புதிய அரசாணையை எமது கூட்டியக்கம் சார்பில் வரவேற்கிறோம்.

பா. ஜான்சிராணி,தலைவர்-TARATDAC 9444405645
 டி.எம்.என். தீபக், தலைவர்,டிச-3 இயக்கம்  9840646953 
 பி. மனோகரன்,   திட்ட இயக்குநர்-NFB தலைவர் 9994895983
 இ.கே. ஜமால் அலி, தலைவர், TNSFD  9710540984

,

No comments:

Post a Comment