15.02.2016, தமிழக முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான ஜெயலலிதாவின் 68-ஆவது பிறந்த நாளையொட்டி, தருமபுரி குண்டல்பட்டியில் உள்ள வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியும், சென்னை ஈஎன்டி ஆராய்ச்சி மையமும் இணைந்து காது கேளாத, வாய் பேச முடியாதோருக்கான இலவச மருத்துவ முகாமை ஞாயிற்றுக்கிழமை நடத்தின.
மாநில உயர் கல்வித் துறை அமைச்சரும், அதிமுக தலைமை நிலையச் செயலருமான பி. பழனியப்பன் குத்துவிளக்கேற்றி முகாமைத் தொடங்கிவைத்தார். கல்லூரித் தலைவர் எம். வருவான் வடிவேலன் தலைமை வகித்தார்.
மாவட்டம் முழுவதும் சுமார் 700 பேர் முகாமில் பங்கேற்று பயனடைந்தனர். இவர்களில் 68 பேர் தேர்வு செய்யப்பட்டு, முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டனர். 250 பேருக்கு காதொலிக் கருவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் அதிமுக மாவட்டச் செயலர் எம். முனுசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றச் செயலர் டி.கே. ராஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவர் தொ.மு. நாகராசன், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் செயலர் மாதவன், துணைத் தலைவர் டாக்டர் வி. வினோத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment