FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Tuesday, February 9, 2016

மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: தமிழக அரசுக்கு கருணாநிதி வலியுறுத்தல்

09.02.2016, மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக ஆட்சிக்கு எதிர்க் கட்சிகளின் மீது எந்த அளவுக்கு கோபமும், வெறுப்பும் இருக்கிறதோ, அதை விட அதிகமாக அவர்கள் ஆட்சிக்கு வந்தது முதல் விவசாயிகள் ஆனாலும், நெசவாளர்கள் ஆனாலும், மீனவர்கள் ஆனாலும்; மக்கள் நலப் பணியாளர்கள் ஆனாலும், சாலைப் பணியாளர்கள் ஆனாலும், சத்துணவுப் பணியாளர்கள் ஆனாலும், அரசு அலுவலர்கள் ஆனாலும், ஆசிரியர்கள் ஆனாலும், மாற்றுத் திறனாளிகள் ஆனாலும், தொழிலாளர்கள் ஆனாலும் அவர்களிடம் எல்லாம் ஒரு அலர்ஜி.

அந்த வரிசையில் மாற்றுத் திறனாளிகளையும் வைத்து, இந்த ஆட்சியினர் தொடக்கம் முதல் படாதபாடு படுத்தி வருகிறார்கள். நேற்று மாலை ஐம்பது மாற்றுத் திறனாளிகள் என்னைச் சந்தித்து, கோரிக்கை தந்து தங்கள் துயரங்களை யெல்லாம் வெளிப்படுத்தினார்கள்.

திமுக ஆட்சியில் சென்னை பொது மருத்துவ மனையில் மாற்றுத் திறனாளிகள் உண்ணாவிரதம் இருக்கிறார்கள் என்று காலையில் ஏடுகளில் படித்ததும், காலை உணவைக் கூட அருந்த மறுத்து, நேராக அவர்கள் உண்ணாவிரதம் இருக்கும் இடத்திற்கே சென்று, உண்ணாவிரதத்தைத் திரும்பப் பெறக் கேட்டுக் கொண்டவன் நான். அதையெல்லாம் நேற்றையதினம் மாற்றுத் திறனாளிகள் நினைவூட்டி, தற்போது நான்கு நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த போதிலும், தங்களை யாரும் வந்து பார்க்கக் கூட இல்லை என்றும், மாறாகக் காவல் துறையினர் வந்து கடுமையாகத் தாக்கியதாகவும் தெரிவித்தார்கள்.

தற்போது என்னை வந்து சந்தித்தவர்கள், பூவிருந்தவல்லியில் பார்வையற்றோருக்கான அரசு மேல் நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறப்பு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் பயிற்சி பெற்றவர்கள். அவ்வாறு பயிற்சி பெற்ற 75 மாற்றுத் திறனாளிகள் இன்னமும் பணி அமர்த்தப்படாத நிலையில் உள்ளார்களாம்.

தற்போது இந்தப் பயிற்சி மையம் நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாம். அவர்களின் கோரிக்கைகளை அதிமுக அரசிடம் பல முறை எடுத்து வைத்தும் இதுவரையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம். அவர்கள் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கு பதிவு செய்து தங்கள் கோரிக்கையை 12 வாரங்களில் பரிசீலனை செய்யும்படி உத்தரவு வழங்கப் பட்ட போதிலும் அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

மாற்றுத் திறனாளிகளின் இந்தக் கோரிக்கைகளை இதுவரை அதிமுக அரசு கவனிக்காமல் இருந்தாலும், அவசர முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பிரச்சினையை இப்போதாவது கவனித்து ஆவன செய்திட முன் வர வேண்டும்'' என்று கருணாநிதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment