FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Tuesday, February 9, 2016

மாற்றுத்திறனாளிகள் திறமைக்கு ஊக்கம் தர வேலை வாய்ப்பு! ரவுண்ட் முறுக்கு தயாரிப்பாளர்கள் திட்டம்

09.02.2016, பொள்ளாச்சி: ரவுண்ட் முறுக்கு தயாரிப்பில் சீரான முன்னேற்றம் கண்டுவரும் கிணத்துக்கடவில், அடுத்து வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு, வேலை வாய்ப்பு வழங்க தயாராகியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில், கை முறுக்கு தயாரிப்பில் தலைமுறைகளாக புகழ்பெற்று வருவது செட்டிபுதுார் (எ) கோப்பனுார்புதுார் கிராமம். நெகமம் அருகே உள்ள இக்கிராமத்தில், ஒவ்வொரு குடும்பமும் இத்தொழிலில் ஈடுபட்டிருந்தது ஒரு காலம். இன்று, புதிய தலைமுறையினர் இத்தொழிலை விடுத்து, படித்து வெவ்வேறு வேலைக்கு செல்ல துவங்கி விட்டனர்.

ஆனாலும், மண் மனம் மாறாத கிராமத்தினர், இன்னமும் முறுக்கு, எள் உருண்டை, தட்டவடை மற்றும் ரவுண்ட் முறுக்கு தயாரித்து வருகின்றனர். பொள்ளாச்சி, கோவை, திருப்பூர் பகுதிகளுக்கு வேன், கார்களில் கொண்டு சென்று, கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். இச்சூழலில், கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் கிணத்துக்கடவில், ஒரு சிலர் துவக்கிய 'ரவுண்ட் முறுக்கு' தயாரிப்பு, கிராமங்களில் உள்ள பெட்டிகடைகளுக்கு சைக்கிள், மொபட்களில் சென்று கொடுத்து வந்தனர். இதில் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு குடும்பத்தையும், குழந்தைகளின் கல்விக்கும் செலவழித்து வந்தனர்.

விருப்பப்பட்ட, கஷ்டப்பட்ட உழைப்பு இத்தொழில் மெல்ல மெல்ல வளர்ந்தது, இன்று, கிணத்துக்கடவில் எட்டு இடங்களில் முறுக்கு தயாரிப்பு கம்பெனிகள் செயல்படுகின்றன. இவற்றில் ஒவ்வொன்றிலும் அதிகபட்சமாக, 40 பெண்கள் வரை பணியில் ஈடுபட்டுள்ளனர்.

காலை, 9.00 மணி முதல் மாலை, 5.30 மணிக்குள், 250 - 350 ரூபாய் வரை சம்பாதிக்கின்றனர். பெரும்பாலும், இத் தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றுகின்றனர்.

இன்று, நாளொன்றுக்கு இரண்டு லட்சம் ரூபாய் விலையிலான முறுக்குகள் வெளியூர் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு, அங்குள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்கப்படுகிறது. அடுத்ததாக, கோவை, பொள்ளாச்சி, ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு செல்கிறது. இந்த தயாரிப்பை விரும்பி வாங்குவதற்கு சுவையும், தரமும் முக்கிய காரணமாகும்.

No comments:

Post a Comment