FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, February 17, 2016

போராட்டத்தில் ஈடுபடவிருந்த மாற்றுத்திறனாளிகளை முன்கூட்டியே கைது செய்த காவல்துறை




17.02.2016
அரசு பணிகளில் 3% இட ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவிருந்த மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் முன்கூட்டியே கைது செய்தனர்.

உடலில் 40 சதவிகிதம் பாதிக்கப்பட்டிருந்தாலே உதவித்தொகை வழங்க வேண்டும், உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்து எழிலகத்திலிருந்து தலைமைச் செயலகம் வரை சென்று மறியலில் ஈடுபட திட்டமிட்டிருந்தனர். ஆனால் போராட்டம் நடைபெறுவதற்கு முன்னதாகவே மாற்றுத்திறனாளிகளை காவல்துறையினர் கைது செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment