FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Saturday, February 6, 2016

'1 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ இலக்கு'

04.02.2016, பெங்களூரு,: ''கடந்த, 2011 முதல், 52 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளது. 2020க்குள், ஒரு லட்சம் பேருக்கு உதவி செய்வதை இலக்காக நிர்ணயித்துள்ளோம்,'' என, சி.பி.ஆர்.எப்., செயல் இயக்குனர் நிக்கோலஸ் ரெபல்லா தெரிவித்தார்.
சமூகம் சார்ந்த மறுவாழ்வு மன்றம் - சி.பி.ஆர்.எப்., அமைப்பு, 'சாமர்த்தியா 2016' எனும் மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியை, பெங்களூரு ரிச்மெண்ட் சதுக்கத்தில் உள்ள செயின்ட் ஜோசப் கல்லுாரியில் நடத்தியது. செயின்ட் ஜோசப் கல்லுாரியின் துணை முதல்வர் லாரன்ஸ் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.
பள்ளி மாணவியர், பலுான்களை பறக்கவிட்டனர். பின், மாற்றுத்திறனாளிகள் தயாரித்த பல்வேறு பொருட்கள் வைக்கப்பட்டிருந்த ஸ்டால்களை பலரும் பார்த்து பாராட்டினர்.
தமிழகம், கேரளா, மிசோரம், மஹாராஷ்டிரா, அசாம், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்கள் மற்றும் கர்நாடகாவின் குல்பர்கா, தொட்டபல்லாபூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் பங்கு பெற்றனர்.
சி.பி.ஆர்.எப்., செயல் இயக்குனர் நிக்கோலஸ் ரெபல்லா பேசியதாவது:
மாற்றுத்திறனாளிகளால் எதையும் செய்ய முடியும் என்பதை உலகிற்கு காட்டுவதே எங்களின் நோக்கம். இதுவரை, 52 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்து, அவர்களின் வாழ்க்கையை மேம்பட செய்துள்ளோம். 2020க்குள், ஒரு லட்சம் பேருக்கு உதவி செய்வதே குறிக்கோள்.
அவர்களின் திறமைகளை வெளியே கொண்டு வந்து, அவர்களுக்கு ஏற்ற வேலைகளை ஏற்பாடு செய்து, வாழ்க்கையில் முன்னேற பண உதவி அளிப்பதோடு, கல்வி தரத்தை உயர்த்தும் வகையில், கல்விக்கான கட்டணத்தையும் ஏற்றுக் கொள்வோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தேவைப்பட்டால், எங்களை, volunteer.cbrf@gmail.com என்ற இ - மெயிலும், 94817 82628 என்ற மொபைலிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.சி.பி.ஆர்.எப்.,பின் துணைத் தலைவர் பவன், ஒருங்கிணைப்பாளர் சீனிவாஸ், செயின்ட் ஜோசப் கல்லுாரி சமூக சேவை துறை கிரண் ஜீவன், அஜிம் பிரேம்ஜி பவுண்டேசன் தலைமை நிர்வாக இயக்குனர் திலீப் ரஞ்சேகர், பயிற்சியாளரான, பார்வையற்ற மாற்றுத்திறனாளி சுதீந்திர குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.

சாதனையாளர்கள் 'எக்கச்சக்கம்'
'சாமர்த்தியா 2016' என்ற மாற்றுத்திறனாளிகள் நிகழ்ச்சியில், தங்களாலும் சாதிக்க முடியும் என, ஏராளமானோர் சாதனையாளர்களாக மகுடம் சூடினர்.
l கேரளா மாநிலம், எர்ணாகுளம் மாவட்டம், பெய்ங்கொட்டூரைவை சேர்ந்த ஸ்வப்னா அகஸ்டின், 13 ஆண்டுகளாக, 'மவுத் அண்ட் புட் பெயின்டிங் ஆர்ட்ஸ் அசோசியேஷனில்' சேர்ந்து, ஓவியங்களை வரைந்து வருகிறார். இவரது ஓவியங்கள், சுவிட்சர்லாந்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. மாற்றுத்திறனாளியான இவர், தன் கால்களால், ஓவியங்கள் வரைந்து, மாதம், 30 ஆயிரம் முதல், 75 ஆயிரம் ரூபாய் வரை சம்பாதிக்கிறார். இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வரைந்துள்ளார்
l மிசோரம் மாநிலத்தை சேர்ந்த சாமுவேல், 23, இரு கால்களும் இல்லாமல் பிறந்தார். ஏழு ஆண்டுகளாக கம்ப்யூட்டர் கிராப்க்ஸ் படங்களை வரைந்து வருகிறார். இதுவரை, 200க்கும் மேற்பட்ட படங்களை வரைந்துள்ளார். இவர், மாதந்தோறும் ஒரு லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார். இவர் கூறுகையில், 'என் பெற்றோர் தான், எனக்கு உறுதுணையாக இருந்து, என்னை ஊக்குவிக்கின்றனர்' என்றார்
l பெங்களூருவை சேர்ந்த, 13 வயது மாற்றுத்திறனாளியான யுவங்கா மரியா கியா ரெபல்லோ சிறுமி, 'ரிவாண்டாவில் சந்திக்கும்போது' என்ற சாதனை புத்தகத்தை எழுதியுள்ளார். 150 ரூபாயுள்ள இந்த புத்தகத்திலிருந்து கிடைக்கும் வருமானத்தை, தமிழகத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொடுக்க முன்வந்துள்ளார்.

No comments:

Post a Comment