FLASH NEWS: நிலவின் தென்துருவத்தில் இறங்கிய சீன விண்கலம்; பாறை மாதிரிகளுடன் 25-ந்தேதி பூமிக்கு திரும்பும் **** சீனாவிடம் இருந்து தைவானை சுதந்திரமாக பிரிந்து செல்ல ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என சீன ராணுவம் தெரிவித்துள்ளது ***** அமெரிக்க ஆயுதங்களால் ரஷிய இலக்குகளை தாக்கலாம்.. உக்ரைனுக்கு அனுமதி அளித்த பைடன் ***** அமெரிக்காவில் நடைபெற்ற 'ஸ்பெல்லிங் பீ' போட்டியில் இந்திய வம்சாவளி மாணவர் புருகத் சோமா சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார் ***** கலவர வழக்குகளில் இருந்து பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விடுதலை ***** நாட்டில் வெப்ப தாக்கத்திற்கு 56 பேர் பலி; என்.சி.டி.சி. அறிக்கை ***** அசாம் மாநிலத்தில் பெய்த கனமழையால் பிரம்மபுத்திரா நதியில் நீர்மட்டம் உயர்ந்துள்ளது ***** நாடு முழுவதும் 3-ந்தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு ***** இங்கிலாந்தில் இருந்து 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வந்த ரிசர்வ் வங்கி ***** பள்ளியிலேயே மாணவ-மாணவிகளுக்கு வங்கி கணக்கு: பள்ளி கல்வித்துறை அறிவிப்பு ***** பிரக்ஞானந்தாவின் வெற்றி வியக்க வைக்கிறது.. கவுதம் அதானி வாழ்த்து ***** திருப்பதி கோவிலில் 65 வயதுக்கு மேற்பட்ட பக்தர்கள் 30 நிமிடத்தில் தரிசனம் செய்ய வசதி ***** சிக்கிமில் மீண்டும் ஆட்சியமைக்கும் எஸ்.கே.எம்? .. அருணாச்சலப் பிரதேசத்தில் பா.ஜ.க முன்னிலை ***** டெல்லியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம் *****

Saturday, February 20, 2016

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இருளில் தவித்த மாற்றுத்திறனாளிகள் : சித்ரவதை செய்வதாக குற்றச்சாட்டு

20.02.2016, சென்னை : தமிழக அரசு துறைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 3 சதவிகித இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம், டிசம்பர் 3 இயக்கம், தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு, தேசிய பார்வையற்றோர் இணையம் உட்பட 4 அமைப்புகளை சேர்ந்தவர்கள் கடந்த 8ம் தேதி முதல் சேப்பாக்கம், போலீஸ் கமிஷனர் அலுவலகம் ஆகிய இடங்களில் தொடர் போராட்டம் நடத்தினர். தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் நல்ல அறிவிப்பு வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் போராட்டத்தை கைவிட்டனர். ஆனால் பட்ஜெட்டில் தங்கள் கோரிக்கை தொடர்பாக எந்த அறிவிப்பும் வராததால் மாற்று திறனாளிகள் நேற்று முன்தினம் சென்னை எழிலகத்தில் மீண்டும் போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்து எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் தங்கவைத்துள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு முழுவதும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் குடிநீர், கழிவறை, உணவு உள்ளிட்ட வசதிகள் இல்லாமல் சிரமப்பட்டனர். இதனிடையே உடல்நலம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குப்புசாமி என்பவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு சென்று மாற்றுத்திறனாளி குப்புசாமி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இந்நிலையில் இன்று 3வது நாளாக மாற்றுத்திறனாளிகள் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு கட்டமாக நேற்றிரவு ஸ்டேடியத்தில் மின்வெட்டை ஏற்படுத்தினர். இதனால் வெளிச்சம் இல்லாமல் மாற்றுத்திறனாளிகள் சிரமப்பட்டனர். ஸ்டேடியத்துக்குள் கொசுத்தொல்லையும் அதிகமாக உள்ளது. மூட துணியில்லாமல் கொசுக்கடியாலும் அவதிக்குள்ளாகியுள்ளனர். குளிர் தாங்க முடியாமல் தவிக்கின்றனர். கடந்த 3 நாட்களாக தங்களை அடைத்துவைத்து சித்ரவதை செய்வதாக போலீசார் மீது மாற்றுத் திறனாளிகள் குற்றம்சாட்டியுள்ளனர். போலீசாரின் இந்த அடக்குமுறையால் மேலும் பல மாற்றுத்திறனாளிகள் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். ‘‘தங்களது கோரிக்கைகளை உடனே நிறைவேற்றவேண்டும்’ என்று மாற்றுத் திறனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment