FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Thursday, February 4, 2016

பிறவியிலேயே காது கேட்காத, வாய் பேச முடியாத சிறுமிக்கு ஆபரேசன் மூலம் காது கேட்கும் திறன்: டாக்டர்கள் சாதனை

 வேலூர், பிப்.4–
வேலூர் மாவட்டம், காட்பாடியை அடுத்த விருதம்பட்டை சேர்ந்தவர் ஷபீர் (வயது 43) கூலி தொழிலாளி. இவருக்கு ஷாகிரா என்ற மனைவியும் 4 குழந்தைகளும் உள்ளனர். இதில் ஷபீரின் 4–வது மகள் யாஸ்மின் (4) பிறவியிலேயே காது கேட்காமலும், வாய் பேச முடியாத நிலையிலும் இருந்தாள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஷபீர் தனது மகள் யாஸ்மினை வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துவந்தார். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள், காதில் அதற்கான கருவியை (மெஷின்) பொருத்தி அதன் மூலம் கேட்கும் தன்மையை ஏற்படுத்தி யாஸ்மினை பேச வைக்க முடியும் என்பதை உறுதி செய்தனர்.

அதற்கான முயற்சியில் கல்லூரி முதல்வர் செல்வராஜன் தலைமையில், காது, மூக்கு, தொண்டை பிரிவு துறை தலைவர் மதனகோபால் மற்றும் டாக்டர்கள் ஈடுபட்டனர்.

சிறுமிக்கு உள் செவியில் உள்ள ‘காக்ளியா’ என்ற பகுதியில் சிறிது குறைபாடு இருந்ததால் செவித்திறனை ஆய்வு செய்து, காது கேட்கும் கருவியை பொருத்த டாக்டர்கள் முடிவு செய்தனர். இதனையடுத்து வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் செல்வராஜன், சென்னை காது, மூக்கு, தொண்டை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பாரதிமோகன், காது, மூக்கு, தொண்டை துறை தலைவர் மதனகோபால் மற்றும் பாரதிமோகன் ஆகியோர் சிறுமிக்கு ‘ஆப்ரேட்டிவ் மைக்ரோஸ்கோப்’ கருவி மூலம் அறுவை சிகிச்சை செய்தனர்.

அதன்பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் யாஸ்மினுக்கு காது கேட்கும் திறன் சரி செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு பிறகு யாஸ்மின், பிறர் சொல்வதையும் கேட்பதையும் உணர முடிந்தது.

பிறவியிலேயே செவித்திறன் குறைபாட்டுடன் பிறந்த சிறுமிக்கு அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் அந்த குறைபாட்டை சரி செய்து டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இது குறித்து டாக்டர்கள் கூறுகையில், ‘‘சொந்தத்தில் திருமணம் செய்துகொள்வதால், மரபு வழியாகவும், பேறுகாலத்தின்போது ஏற்படும் வைரஸ் தொற்று மற்றும் சில நிகழ்வுகளாலும் செவிப்பறையில் உள்ள காக்கிளியாவின் வளர்ச்சி முழுவதுமாக பாதிக்கப்படுகிறது. இந்த சிறுமிக்கும் இதுபோன்ற பாதிப்புதான் ஏற்பட்டுள்ளது.

இந்த தம்பதிக்கு பிறந்துள்ள முதல் மற்றும் 3-வது குழந்தைகள் ஆரோக்கியமாக உள்ளன. ஆனால் 2–வது மற்றும் 4–வது குழந்தை யாஸ்மின் ஆகியோர் காது கேட்காமலும், பேச முடியாமலும் உள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை 1 முதல் 6 வயதிற்குள் தான் செய்யமுடியும். 6 வயதுக்கு மேல் ஆகிவிட்டால் சிகிச்சை செய்தாலும் பலனில்லை. 2–வது குழந்தைக்கு 6 வயதுக்கு மேல் ஆகிவிட்டதால் அந்த குழந்தைக்கு சிகிச்சை செய்ய முடியவில்லை.

ஆனால் யாஸ்மினுக்கு 4 வயதே ஆவதால் முதல்–அமைச்சரின் விரிவான காப்பீடு திட்டத்தின்கீழ் ரூ.7 லட்சம் செலவில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இதுபோன்ற அறுவை சிகிச்சை நடப்பது இதுவே முதன்முறையாகும்.

இதுபோன்ற குறைபாடு உள்ளவர்களை நன்கு பரிசோதனை செய்து காது கேட்கும் கருவியை பொருத்தி பரிசோதனை செய்வோம். இதில் பயன் இல்லை என்றால் ‘காக்ளியார் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை செய்து காது கேட்க வைப்போம். அதன்படி இந்த குழந்தைக்கு ‘காக்ளியார் இம்ப்ளான்ட்’ அறுவை சிகிச்சை செய்த பின்னரே காதுகேட்கும் திறன் கிடைத்தது.

இந்த சிகிச்சையை தொடர்ந்து யாஸ்மினுக்கு ஒரு வருடம் வரை பேச்சு பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சிக்கு பின் மெதுவாக பேச ஆரம்பித்து மற்ற குழந்தைகள் போல யாஸ்மினும் பள்ளிக்கு சென்று நன்றாக படிக்கவும் முடியும்’’ என்றனர்.

No comments:

Post a Comment